பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nose

747

nothing by mouth


திலுள்ள நூர்வால்க் நகரில் முதலில் கண்டறியப்பட்டது.

nose : மூக்கு : முகத்தின் மையப் பகுதியில் புறம் நீட்டிக்கொண் டிருக்கும், முகர்வுணர்வு உறுப்பாகப் பயன்படும் உறுப்பு. இதன் உட்குழிவுகள் திறந்திருப்பதால், உட்சுவாசிக்கும் காற்று உட்செல்லும்போது அந்தக் காற்று வெதுவெதுப்படைகிறது; ஈரமடைகிறது. வடிகட்டப்படுகிறது.

noso : நோய்ப்பகுப்பாய்வு சார்ந்த : நோய்ப் பகுப்பாய்வு தொடர் புடைய இணைப்புச் சொல்.

nosocomial : மருத்துவமனை நோய் சார்ந்த.

nosography : நோய் விளக்கம் : நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.

nosology : நோய் பகுப்பாய்வியல்.

nostalgia : தாயக நாட்டம்; ஊர் நோய் : வீட்டு நினைவு மனப் பாங்கு பழங்கால நாட்டம்.

nostrils : மூக்குத் துளைகள்; மூக்கு ஒட்டை; நாசித்துளை : மூக்கின் முன்பக்கத் திறப்பு வாயில்கள்.

nostrum : கைம்மருந்து; மருந்து : உரிமம் பெறாமல் தயாரிக்கப்படும் போலி அல்லது இரகசிய மருந்து.

nosy : பெருமூக்கு.

notch : பிளவு; வெட்டு.

notching : விலா எலும்பு வரித்தடம் : மார்பு ஊடுகதிர்ப் படங்களில் விலா எலும்புகளின் முன்புறத்தில் காணப்படும் சிறு வரித்தடங்கள். இவை பெருந் தமனியின் பின்னாலுள்ள இழை நாளக் குறுக்கத்தின் போது காணப்படும்.

notch sign : ஊடுகதிர் ஒளிக் கோடு : ஒரு குறுகிய நோய் கோட்டிலான ஊடுகதிர் ஒளிக் கோடு. இது நன்கு வரையறுத்த சுட்டவட்ட நுரையீரல் திரட்சியை ஊடுருவிச் செல்கிறது. இது உக்கிரமான குருணைக்கட்டி நிலைமைகளில் காணப்படுகிறது.

note : குறிப்பு; அறிவிப்பு.

note-taking : குறிப்பெடுத்தல் : நோய் என்னவென்று காட்டும் நோய்வரலாற்றையும் உடலியல் குறிகளையும் துல்லியமாகப் பதிவுசெய்தல்.

nothing by mouth : வாய்வழி உண்ணாமை : ஒரு நோயாளி வாய்வழியாக உணவு, பானம் அல்லது மருந்து எதனையும் உட்கொள்ளக்கூடாது என்ற அறிவுறுத்தும் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக இருக்கும் நோயாளிக்கு அவரது உணவுக் குழாய் முற்றிலும் காலியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.