பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/752

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

null phenotype

751

nutritional


null phenotype : பயனிலாஃபெனோடைப் : ஒரு புரதத்தின் நேரி ணையான மரபணு, மரபுவழி உயிரணுக்களில் குறைபாடுடையதாக அல்லது இல்லாமல் இருத்தல். இது '0' குருதிக் குழுமத்தில் உள்ள சிவப்பணுவை உள்ளடக்கியது.

numbness : மரமரப்பு; உவர்வின்மை : பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல்.

nummular : நாணய வடிவம் : 1. நாணயத்தின் வடிவில் உள்ள. 2. நைவுப்புண்கள் போன்ற செதிலுடைய தோல்படை உள்ள தோல்நோய். 3. நான யத்தை ஒத்தவட்டத் தகடுகளில் உள்ள கோழைச் சளி.

Nupercaine : நூப்பர்க்கெய்ன் : சிங்கோக்கெய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

nurse: செவிலி : நோயாளிகளைக் கவனிக்கும் ஆள், பிறந்த குழந் தையை அல்லது இளம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தல்.

nursery : வளர்வகம்; வளர்ப் பிடம்; மழலையகம்.

nursemaid's elbow : செவிலிப்பெண் முழங்கை : ஆரத்தலைப் பின் அரைகுறை மூட்டுப்பிசகு,

nurse's aide : செவிலி உதவியாளர் : படுக்கை விரித்தல், உணவு பரிமாறுதல் போன்ற மருத்துவம் சாராத சேவைகளைச் செய்வதற்கு மருத்துவ மனைகளில் அமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண்.

nursing : நோயாளர் பேணுதல் : 1. நோயாளிகளைப் பேணிக்கத்து வருதல். 2. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தல்.

nurture : ஊட்டி வளர்ப்பு : வளரும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி, பேணி, கவனித்து வளர்த்தல்.

nutation : தலையாட்டம்; தலையாடல் : கட்டுப்படுத்த முடியாமல் தலை ஆடுதல்.

nutmeg-liver : நோயுற்ற ஈரல்.

nutrient : ஊட்டசத்து; ஊட்டம்; ஊட்டு : ஊட்டச் சத்தாகப் பயன்படும் பொருள்.

nutriment : சத்துணவு : ஊட்டச்சத்து மிகுந்த உணவு.

nutrition : உணவூட்டம்; ஊட்டச்சத்து; ஊட்டம் : திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு.

nutritional : உணவு ஊட்டம் சார்ந்த : உணவின் தரம் தொடர் புடைய.