பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

onchocerca

764

one-eyed ...


ஆகியவை மயிர்ப்பை சுரப்பு நீருடன் கலந்து திரண்டிருக்கும் ஒரு கலவை. இது உந்திக் குழியில், பழுப்புநிற அல்லது கருப்பு நிறக் கல்லாக இருக்கலாம்.

onchocerca : யானைக்கால் நோய்ப் புழு : யானைக்கால் நோய் உண்டாக்கும் புழுக்களில் ஒருவகை.

onchocerciasis : யானைக்கால் புழுபீடிப்பு : யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல். தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும். கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும்.

onchogenic : கட்டி உண்டாக்கும் கிருமி : உயிரணுக்கள் உக்கிரமான உருமாற்றத்தை உண்டாக்கும் திறனுடைய கட்டி ஏற்படுத்தும் நோய்க்கிருமி, அல்லது டி.என்.ஏ. கிருமி அல்லது ஆர்.என்.ஏ. கிருமி.

oncogene : ஆன்கோஜென் : புற்று மரபணுக்கள் போன்ற உக்கிரமான உருமாற்றத்தைத் தூண்டக்கூடிய, மேலாதிக்கத்துடன் செயற்படக்கூடிய மாற்றியமைத்த மரபணுக்கள். இவை ஆன்கோஜெனிக் ஆர்.என்.ஏ. கிருமிகளிலிருந்தும், இயல்பான மரபணுக்களிலிருந்தும் உருவிக் கப்படுகின்றன.

oncogenes : புற்று மரபணுக்கள் : கட்டுப்படுத்த முடியாத புற்று நோய் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு உந்து பொருளினால் துண்டப்படுவதாகக் கருதப்படும் மரபணுக்கள்.

oncogenic : கழலை உண்டாக்குகிற.

oncology : உயிர்ப் பொருளியல்; புத்தாக்கவியல் : உயிர்ப் பொரு ளினை அறிவியல் மருத்துவ முறையில் ஆராய்தல்.

oncolysis : உயிர்ப்பொருள் அழிவு; புத்தாக்கமுறிவு : உயிர்ப் பொருள்களை அழித்தல்; சில சமயம் கட்டியின் வடிவளவைக் குறைக்கப் பயன்படுகிறது.

oneosphere : திசுக்கட்டிப்புழு : முதுகெலும்புப் பிராணிகள் மற்றும் முதுகெலும்பில்லாய் பிராணிகளின் திசுக்களில் உள்ள நாடாப் புழுவின் கூட்டுப்புழு நிலை.

Oncovin : ஆன்கோவின் : வின்கிரிஸ்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

one eyed : ஒற்றைக் கண்.

one-eyed vertebra : ஒற்றைக் கண் முள்ளெலும்பு : இடுப்பு நரம்பு முள்ளெலும்புக் காம்பு ஒரு பக்கமாக அழிந்துபோதல். இதனை முதுகெலும்பு உடலின் உறுப்பிடை மாற்றத் தசைப் புற்றின் வரைபடத்தில் காணலாம்.