பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

onion bulbs

765

oophorectomy


onion bulbs : வெங்காயக் குமிழ்கள் : கருமையான நரம்பிழை உறையழிவில் புறநரம்புகளில் காணப்படும் பகுதிவாரி நரம்பிழை உறையழிவு. இதில் 'ஷபான்' உயிரணுக்கள் வெங்காயத் தோல் போன்று செதிளடுக்காக அமைந்திருக்கும்.

onlay : ஒட்டிணைப்பு : ஒர் உறுப்பின் அல்லது கட்டமைப்பின் மீது பொருத்தப்படும் ஒட்டிணைப்பு. உள்துளை பரப்பு முழுவதையும் மூடும் வகையில் நீட்டிக்கப்படும் அகற்றுப்படத் தக்க பகுதி செயற்கைப் பல் தொகுதி.

onset : தொடக்கம்.

onychia (whitlow) : நகச்சுற்று; நக அகற்சி; நகப்படுவன் : நகத்தைச் சுற்றி ஏற்படும் கடுமையான வீக்கம் சில சமயம் இந்த வீக்கம் நகத்திற்கு அடியிலும் பரவி, சீழ் வைத்து நகம் விழுந்து விடும்படி செய்யும்.

onychodystrophy : நக உருத் திரிவு : விரல் நகங்களின் அல்லது கால் நகங்களின் உருத்திரிபு அல்லது நிறமாற்றம்.

onychocryposis : உள்நக வளர்ச்சி; திருகு நகம்; மறை நகர் : நகம் தசைக்குள் உள்நோக்கி வளருதல்.

onycholysis : நகத் தளர்ச்சி; நக நெகிழ்ச்சி : கால் நகம் அல்லது விரல், நகம், நகப்படுகையில் இருந்து நீக்கிவிடுதல்.

onychomycosis : பூசனநகச் சுற்று; நகப்பூசணம் : நகங்களில் ஏற்படும் பூஞ்சண நோய்.

onyongnyong fever : மூட்டு வலிக் காய்ச்சல் : கிழக்கு ஆஃப் ரிக்காவில் கொசுவால் பரவும் ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒருவகைக் காய்ச்சல், இது முதன் முதலில் 1959இல் வடமேற்கு உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

oocyte : முதிராச்சினை : முதிராத சூல் முட்டை.

oogamous : கரு உயிர்ச் சேர்க்கை தோற்றம் : ஆண்-பெண் கரு உயிர்மச்சேர்க்கையின் விளைவாக இனப்பெருக்கம் ஏற்படுத்துகிற.

oogamy : பாலின இனப்பெருக்கம் : ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டாதல்.

oogenesis : கருவுயிர்த் தோற் றம்; கரு அணு தோற்ற வளர்ச்சி : பெண் அண்டத்தில் பெண்கரு உயிரணுக்கள் தோன்றி உருவாதல்.

ookinete : மலேரிய ஒட்டுண்ணிக் கரு : கொசுவின் உடலில் உள்ள மலேரிய ஒட்டுண்ணியின் கருவுற்ற வடிவம்.

oophorectomy : பெண் அண்டச் சுரப்பி (ovary) அறுவை; அகற்றல்;