பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oophoritis

766

operation


அண்டைப்பை வெட்டு : பெண் அண்டச்சுரப்பி அகற்றல்.

oophoritis : அண்டப்பை அழற்சி : பெண் அண்டச் சுரப்பியில் எற்படும் வீக்கம்.

oophoron : கருமுட்டைப் பை.

oophorosalpingectomy : கருப்பை குழாய்; கருவண்ட அறுவை; கருப்பைக் குழல் எடுப்பு : கருவண்டப் பையையும் அதனுடன் இணைந்த கரு வெளியேறும் குழாயையும் வெட்டியெடுத்தல்.

oophorosalpingitis : கரு அண்டம்-கருக்குழாய் வீக்கம் : கரு அண்டம், கருவெளியேறும் குழாய் இரண்டிலும் ஏற்படும் வீக்கம்.

oosperm : முதிர்வுச் சினை : முதிர்வுற்ற சூல் முட்டை.

ooze : ஒழுகு கசிவு.

opacity : மழுங்கல்; ஒளி புகாமை; ஒளி புகாத்தன்மை : ஒளி ஊடுரு விச் செல்லவிடாத தன்மை.

open amputation : திறந்தருவை உறுப்பு நீக்கம் : தோல் மூடி இல்லாமலே நேரடியாக உறுப்பைத் தறித்தெடுக்கும் உறுப்பு நீக்க முறை.

open bite : திறந்த நிலைக் கடித்தல் : முன்பக்கப் பற்கள், தாடை யின் இரு பகுதிகளில் எதனுடனும் பொருந்தி அமைந்த இயல்பு திரிந்த பல் அமைப்பு.

open heart surgery : திறந்த நிலை இதய அறுவை மருத்துவம் : இதயம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு அதன் செயல்முறையை ஒர் எந்திர இறைப்பான் மூலம் எடுத்துக்கொண்டு இதயத்தில் அறுவை மருத்துவம் செய்யும் ஓர் நடைமுறை.

open pneumothorax : திறந்த நிலை நுரையீரல் உறை காற்று நோய் : மார்புச் சுவரில் ஒரு திறந்த நிலைக் காயம் காரணமாக நுரையீரல் உட்குழிவில் காற்றழுத்தம் ஏற்படுதல்.

operable : அறுவை மருத்துவம் உகந்த நிலை : குணப்படுத்துவதற்கு அல்லது நிவாரணமளிப்பதற்கு அறுவை மருத்துவம் அளிப்பதற்கு உகந்ததாக உள்ள நிலை.

operant : துலங்கல் வீதம் : குறிப்பிட்ட புறத்தூண்டல் எதுவு மில்லாமல் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் நிகழ்கிற துலங்கல் எதுவும்.

operating microscope : அறுவை நுண்ணோக்காடி : நுண்ணிய திசுக்களிலும் குருதி நாளங்களிலும் அறுவை மருத்துவம் செய்யும் போது அவற்றை உருப்பெருக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி.

operation : அறுவை மருத்துவம்; அறுவை : உடலில் ஒர் உறுப்