பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ophthalmoscope

768

opponens


ophthalmoscope : கண் உள் விழி உள்நோக்கி; கண்சோதனைக் கருவி; விழி உள்நோக்கி; கண்ணுள் காணல் : கண்ணின் உட்புறத்தைப் பரிசோதிப்பதற்காக ஒர் ஆடியும், ஒளிவிளக்கும் அமைந்துள்ள ஒரு கருவி.

ohpthalmotonometer : கருவிழி அழுத்தமானி; கண்ணழுத்த அளவைமானி : கருவிழிக்குள் நீரழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி.

opiate : அபின் தூக்க மருந்து : அபின் போன்ற தூக்க மருந்து, அபின் கலந்த நோவகற்றும் மருந்து அபின் கலந்து மயக்கமூட்டும் மருந்து.

opioid peptides : அபினி பெப்டைடுகள் : உள்முக மயக்கமூட்டும் அபின் கலந்த மயக்மூட்டும் மருந்துகள். இவை இயற்கையான பன்முகப் பெப்டைடு நரம்பு கடத்திகள். இவை வலியை உணர்தல், அழுத்த விசைத் துலங்கல், பசியை முறைப்படுத்துதல், உறக்கம், நினைவாற்றல், கல்வி கற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

opisthotonos : உடல் நீட்சி : நரம்பிசிவு நோயாளிகளுக்கு உடல் அளவுக்கு மீறி நீட்சி, விரைத்தல். அப்போது அவரது பாதங்களும், தரையும் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

opisthotonus : உள்வளைந்த முதுகு.

Optiz-Frias syndrome : ஓபிட்ஸ்-பிரியாஸ் நோய் : சிறுநீர்க்குழாய் உருத்திரிபு, தொண்டைக் குழி அடைப்பு போன்ற நோய்கள். இவை மிக அரிதாக ஏற்படும் மரபுவழி நோய்.

opium : அபினி; கஞ்சா; கம்புகம் : கஞ்சாச்செடி விதையிலிருந்து எடுக்கப்படும் உலர்ந்த சாறு. இதில் மார்ஃபின், கோடைன் வெடியக் கலப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன. நோவகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது. மார்பினைவிட இது அதிக மலச்சிக்கலை உண்டாக்கும். அபினிச் சாரமாகவும் பயன் படுகிறது.

opoidine : ஒப்பாய்டின் : பாப்பா வெர்ட்டம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Oppenheim's reflex : ஒப்பன்ஹைம் இயக்கம் : பாதம் சிறிதளவு பின்புறம் வளைந்து, பெரும்பாலும் நீண்டிருத்தல். பெர்லின் நரம்பியலறிஞர் ஹெர்மன் ஒப்பன்ஹைம் பெயரால் அழைக் கப்படுகிறது.

opponens : எதிர்ப்புத்தசை : கட்டை விரலின் தசை எதிர்ப் புறமாகத் திரும்பியிருத்தல். கட்டுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடுவதன்