பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

opportunists

769

optical


மூலம் இது சோதித்தறியப் படுகிறது.

opportunists : சந்தர்ப்பவாதி : பழுதுபட்ட தாய் உயிர்த் தற்காப்புச் செயல்முறைகளின் வாய்ப்பு வழிகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்.

opportunistic infections : சந்தர்ப்பவாதத் தொற்று நோய்கள் : ஆரோக்கியமான ஒருவரிடம் அரிதாகநோய் உண்டாக்குகிற. ஆனால், நோய்த் தடைக் காப்பு முறை பலவீனமாக உள்ளவர்களிடம் அடிக்கடி நோய் உண்டாக்குகிற உயிரிகளினால் ஏற்படும் நோய்கள். ஏமக்காப்பு நோய் (எயிட்ஸ்) போன்ற நோய்கள் இதற்குச் சான்று.

opsin : ஊடு சவ்வுப் புரதம் : விழித்திரை நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளின் ஊடு சவ்வுப் புரதம்.

opsoclonus : கண் சுரிப் பிழுப்பு : கண்களின் கலந்திணைந்த, ஒழுங் கற்ற, ஒரு சீராக இல்லாத, சுரிப் பிழுப்பு உடைய அசைவுகள்.

opsomania : தனி உணவு மோகம் : சில சிறப்பான உணவுக்கான மோகம்.

opsonic : நிணநீர்த்திறள் : நோய் நுண்மங்களை நிணநீர் அணுக்கள் எளிதில் ஈர்த்துக்கொள்ளும் செயலைச் செய்யும்.

opsonin , நோய் நுண்ம எதிர்ப்பு விளை பொருள் : நோயாளியின் உடம்பினுள் அழிந்த நோய்க் கிருமிகளைச் செலுத்துவதால் உண்டாகும் பொருள்.

opsonic index : நிணநீர்திறன் குறியீட்டெண் : நோயனுக்களை ஈர்த்துக் கொண்டு உடலை நோய்களிலிருந்து தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணுக்கள். பாக்டீரியா போன்ற அயற்பொருள்களை உள்ளே கொண்டு செல்வதற்க எவ்வளவு திறன் வாய்ந்தனவாக இருக்கின்றன என்பதைக் குறித்துக் காட்டும் பரிசோதனை மூலம் கிடைக்கும் குறியீட்டெண்.

opsonization : துகள் உயிரணு சூழ்தல் : துகள் சூழ் உயிரணு சூழ்தலுக்கு பாக்டீரியாவும் பிற உயிரணுக்களும் உட்படுமாறு செய்தல்.

optic : கண்சார்ந்த; பார்வை சார்ந்த : கண்பார்வைக்குரிய.

opticatrophy : பார்வை நரம்பு சூம்புதல்.

optic chiasma : பார்வைச் சந்தி : பார்வைச் சிலுவை.

optic disc : பார்வை வட்டு.

optic nerve : பார்வை நரம்பு.

optic neuritis : பார்வை நரம்பு அழற்சி.

optical : கண்ணுக்குரிய/பார்வைக் குரிய : கண் பார்வைக்கும் ஒளிக்