பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

optical aberration

770

orange peel skin...


கும் இடையிலான தொடர்பு சார்ந்த; ஒளியியல் சார்ந்த பார்வைக்கு உதவி புரியும் வகையில் அமைந்த.

optical aberration : ஒளிக்கோட்டம்; பார்வைத் திரிபு : ஒர் ஆடி யிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தவறாகக் குவிதல்.

optical illusion : விழிக்காட்சி மயக்கம் : பொய்த்தோற்றம்.

optician : மூக்குக்கண்ணாடி வல்லுநர்; பார்வை வல்லுநர் : பார்வை ஒளிக்கோட்டத் தவறுகளைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடிகளை பரிந்துரைக்கும் வல்லுநர். மூக்குக்கண்ணாடி செய்பவரையும், மூக்குக்கண்ணாடி விற்பவரையும் இது குறிக்கும்.

opticokinetic : கண்ணசைவு சார்ந்த : கண்ணின் அசைவு தொடர்புடைய.

optics : ஒளியியல்; கண்ணொளி யியல் : ஒளிக்கதிர்கள் பற்றியும் கண்பார்வையுடன் அவற்றின் தொடர்பு குறித்தும் ஆராயும் அறிவியல்.

optimax : ஆப்டிமாக்ஸ் : அமினோ அமிலமும், டிரிப்டோ ஃபான் பிரிடாக்சின் அஸ்கார்பிக் அமிலம் அடங்கிய வைட்டமினும் கலந்த ஒரு கலவை மருந்தின் வணிகப்பெயர்.

optimism : எழுச்சி மனப்பான்மை : இனிமை நம்பிக்கை; ஓங்கு நம்பிக்கை எதிலும் நன்மையே எதிர்பார்க்கும் மனப்போக்கு.

optimum : உகந்த சூழல்; சரியான : உயிர் வாழ்வதற்கு பெரிதும் சாதகமான சூழ்நிலை.

optometer : விழிக்காட்சித் திறன் மானி : விழிக்காட்சித் திறன் எல் லையளவை அளவிடும் கருவி.

optometrist : பார்வை அளவீட்டாளர் : விழிக்காட்சித்திறன் எல்லையை அளவிடுவதில் பயிற்சி பெற்றவர்; மூக்குக் கண்ணாடி, பிற பார்வைச் சாதனங்களை அளவிட்டுக் குறித்துக் கொடுப்பவர்.

optometry : விழிக்காட்சித் திறன் அளவீடு; பார்வை அளவையியல் : விழிக்காட்சித் திறனை அளவிடுதல்.

orabase : ஒராபேஸ் : சிலேட்டுமப் படலத்திலுள்ள நைவுகளைப் பாதுகாக்கும் கூழ் பொருளின் வணிகப்பெயர்.

Oradexon : ஒராடெக்சோன் : டெக்சாமெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

oral : வாய் சார்ந்த; வாய் வழி : வாய் வழியான.

orange peel skin appearance : ஆரஞ்சுத் தோல் தோற்றம் : மார்பகப் புற்றை மேல் மூடியுள்ள தோலில் உள்ளது போன்ற ஆரஞ்சுப் பழத்தோல் தோற்றம்.