பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

organelle

772

orientation


rganelle : தனியுறுப்பு : உயிரணுவில் இழைமத்துடன் இணைக் கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பு.

organic : உறுப்பு சார்ந்த; உறுப்பியல் : உடல் உறுப்புக்குரிய உயிர்ப்பொருள் சார்ந்த கரிமப் பொருள்களாலான.

organism : உயிரி; உயிரணுத் தொகுதி; உயிரினம்; உயிர்ப் பொருள்; உயிர் கரு; உறுப்பி : ஒரு வாழும் உயிரணு அல்லது உயிணுக்களின் தொகுதி. ஒருயிர் போல் இயங்கும் உறுப்பமைதியுடைய உயிர்.

organ of Corti : கோர்ட்டி உறுப்பு : கேட்பதற்குரிய உண்மையான உறுப்பு. இது இத்தாலிய உடல் கூறியலறிஞர் ஆர்ஃபான்சி கோர்ட்டி பெயரால் அழைக் கப்படுகிறது. இது செவியின் சுருள் வளையினுள் உள்ள ஒரு திருகு சுருள் கட்டமைப்பு. இதில் ஒலி அதிர்வுகளால் தூண்டப்படும் முடி உயிரணுக்கள் அடங்கியிருக்கும். இவை, நரம்புத் துண்டுதல்களாக மாற்றப்பட்டு கேட்பு நரம்பின் சுருள்வளைப் பகுதி மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகின்றன.

organogenosis : கருப்பை உறப்புருவாக்கம் : கரு உருவாக்க வளர்ச்சியின்போது உறுப்புகளும் உறுப்பு மண்டலங்களும் உருவாகி வெவ்வேறு வடிவங்களைப் பெறுதல்.

organoid : செயற்கை உறுப்பு : ஒர் உறுப்பின் இரத்த நாள மற்றும் சுரப்புத் திறம்பாடுகளைக் காட்டும் செயற்கை உறுப்பு.

organopexy : உறுப்புப் பொத்துதல் : ஒர் உறுப்பு அதற்குரிய இடத்திலிருந்து பிரிந்துவரும் போது, அதனை அந்த இடத்தில் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

organotherapy : சுரப்பிப் பொருள் நோய் மருத்துவம் : விலங்குகளின் அகச் சுரப்பிகளின் தயாரிப்புப் பொருள்கள் அல்லது அவற்றின் எடு பொருள்கள் மூலம் நோயைக் குணப்படுத்துதல்.

orgasm : புணர்ச்சி பரவசநிலை; பாலுணர்வுப் பொங்கல் : புணர்ச்சி யின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பரவச நிலை உணர்ச்சித் துடிதுடிப்பு புணர்ச்சியிடைத் துடிப்பு நிலை.

oriental sore : கீழ்த் திசஒப் புண்; வெப்பக் கொப்புளம் : வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் தோலில் உண்டாகும் வெம்புண்.

orientation : சூழ்நிலை அறிவு; இட-திசையுணர்வு : மனக் கோளாறின்போது நோயாளி தான் இருக்கும் இடத்தையும், காலத்தையும் தெளிவாக அறியுந்திறனுடனிருத்தல். எடுத்துக்காட்டாக, அவர் சரியான தேதியைக் கூறுவார்.