பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/778

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osmolar

777

osmotic agent


வழி வரக்கூடியது. இதனால், தோலிலும், சளிச்சவ்வு இழைமத்தில் சிவப்பு முதல் செங்கரு நீலம் வரையிலான நிறமுடைய நைவுப் புண்கள் எற்படும். விரிவாக்கமடைந்த மெல்லிய நாளங்களிலிருந்து இரத்தப் போக்கு உண்டாகும்.

osmolar : ஊடுபரவல் சார்ந்த : ஒரு கரைசலின் ஊடுபரவல் செறிவு தொடர்புடைய.

osmolar gap : ஊடுபரவல் திறன் வேறுபாடு : அளவிடப்பட்ட ஊடுபரவல் திறனுக்கும், கணக்கிடப்பட்ட ஊடுபரவல் திறனுக் குமிடையிலான வேறுபாடு.

osmolality : ஊடுகலப்புத் திறன் : ஒரு கிலோகிராம் கரைசலில் உள்ள ஊடு கலப்புப் பொருள்களின் (அஸ்மால்) எண்ணிக்கை.

osmole : ஊடு கலப்பு அலகு : சவ்வூடு (ஊடுகலப்பு) அழுத்தத்தின் திட்ட அளவு அலகு. இது ஒரு கரைவத்தின் கிராம் மூலக்கூற்று எடையை அது கரைசலில் சிதைவுறுகிற துகள்களின் அல்லது அயனிகளின் எண் ஈவுக்குச் சமம்.

osmology : ஊடு கலப்பியல் : முகர்வு உணர்வு பற்றிய அறிவியல்.

osmometer : ஊடு கலப்பு அளவுமானி : ஊடுகலப்பு விசையை அளவிடுவதற்கு அல்லது முகர்வுத்திறனின் கூர்மையை அளவிடுவதற்குப் பயன்படும் சாதனம்.

osmophilic : ஊடு கலப்பு இணைவுத் திறன் : மிக அதிகமான ஊடு கலப்பு அழுத்தத்தையுடைய கரைசல்களின் இணைவுத்திறன்.

osmoreceptor : ஊடு கலப்பு ஏற்பான் : ஊடுகலப்பு அழுத்தத்தில் அல்லது நறுமண உணர்வில் எற்படும் மாறுதல்கள் காரணமாகத் தூண்டப்படும் உணர்வு ஏற்பார்.

osmotherapy : ஊடுகலப்பு மருத்துவம் : ஊடுகலப்புச் சரிவு வாட்டம் மூலமாக மூளையிலிருந்து நீரை உறிஞ்சி, மூளை நீர்க்கோவையைக் குறைப்பதற்கு அளவுக்கு மீறிய ஊடு கலப்பு அழுத்தமுடைய கரைசல்களை உட்செலுத்துதல்.

osmosis : ஊடுகலப்பு; சவ்வூடு பரவல்; ஊடு கசிவு; ஊடுபரவல் : துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை.

Ospolot : ஆஸ்போலாட் : சல்தியாம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

osmotic agent : ஊடு கலப்பு ஊக்கி : ஒர் உயிரணுச் சவ்விலிருந்து இன்னொரு சவ்வுக்கு திரவம் பாய்வதைத் தூண்டு