பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osmotic diuresis

778

osteoblastic tumours


வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.

osmotic diuresis : ஊடுகலப்பு மிகைச் சிறுநீர்ப்போக்கு : சிறுநீரக நுண்குழல்களிலுள்ள, உறிஞ்சத்தக்கதாக இல்லாத பொருள்கள் இருப்பதால் ஏற்படும் மிகைச் சிறுநீர்ப் போக்கு.

osmotic ragility : ஊடுகலப்பு நலிவு : 0,45%, 0.3% வலிமையுள்ள உப்புநீரிலுள்ள இயல்பான சிவப்புக் குருதியணுச் சிதைவு, பரம்பரைக் கோணச் சிவப்பணு அழிவில் இது அதிகரிக்கிறது. தாலசேமியா, மஞ்சள் காமாலை, அரிவாள் உயிரணுச் சோகை, இரும்பு மருத்துவம் ஆகியவற்றில் இது குறைகிறது.

osmotic pressure : ஊடுகலப்பு அழுத்தம் : கரைப்பான் ஒரு தனி யறைக்குள் இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான அழுத்தம். இதில், கரைப்பானுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய சவ்வின் மீதான கரை பொருளின் செறிவு அதிகமாக இருக்கும். ஆனால் கரைபொருள் மீது இராது. இது ஊடுகலப்புத் திறனாக அளவிடப்படுகிறது.

osseous : எலும்பான; எலும்புப் பண்பு; எலும்பு சார் : எலும்பினா லான எலும்பு போன்ற எலும்பு உட்கொண்ட, எலும்பாகிவிட்ட எலும்புக்கூடுள்ள.

ossicles : சிறு எலும்பு; சிற்றெலும்பு; நுண் எலும்பு : உடம்பிலுள்ள சிறு எலும்பு குறிப்பாக நடுக்காதில் உள்ள சிற்றெலும்புகள்.

ossicles, ear : காது நுண் எலும்பு.

ossification : எலும்பாக்குதல்; எலும்பு இணைப்பு; எலும்பாக்கம் : குருத்தெலும்பு முதலிய சிறிய எலும்புகளை கடினமான எலும்புகளாக மாற்றுதல்; எலும்புகளைக் கெட்டிப்படுத்துதல்.

ossification center : எலும்பு மையம்.

osteitis : எலும்பழற்சி: எலும்பு வீக்கம்.

osteoarthritis : எலும்பு மூட்டு வீக்கம்; கீல்வாதம் : உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம்.

osteoarthropathy : மூட்டு-எலும்பு நோய் : மூட்டுகளிலும் எலும்புகளிலும் ஏற்படும் ஒரு நோய்.

osteoarthrosis : மூட்டுத்திருகு சுருள் : வீக்கம் ஏற்படாமல் மூட்டு திருகிக் கொள்ளுதல்.

osteoblast : எலும்பு உயிரணு எலும்பாக்கத் திசு : எலும்பை உருவாக்கும் உயிரணு.

osteoblastic tumours : கேடய இலக்கு நீர்க்கட்டிகள் : துணைக் கேடய இயக்கு நீர் போன்ற செயலுடன் கூடிய பொருள்களினால் உண்டாகும் கட்டிகள்.