பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osteopath

781

osteosynovitis


osteopath : வர்ம மருத்துவர்; எலும்பு நோயியலார் : தசை மற்றும் முட்டுகளைப் பிடித்து விடுவதால் நோய் நீக்கும் வர்மப் பிடி மருத்துவர்.

osteopathy : எலும்பு நோயியல்; வர்ம மருத்துவம்; எலும்பு மருத்துவம் : தசையைப் பிடித்துவிட்டு நோயைக் குணப்படுத்தும் வர்மப்பிடி மருத்துவ முறை.

osteoperiostitis : எலும்பு சவ்வு வீக்கம் : ஒர் எலும்பிலும் அதன் எலும்புச் சவ்விலும் ஏற்படும் அழற்சி.

osteopetrosis : எலும்பு முறிவு நோய்; தடியெலும்பு மெலிவு நோய் : இதனை ஆல்பெர்ஸ் ஷோன்பெர்க் நோய் என்றும் கூறுவர். எலும்பு பதங்கெடும் நோய். இதனால் எலும்பு மிகவும் அடர்த்தியாகி, எளிதில் முறிந்துவிடும். இது ஒரு பிறவி நோய்.

osteophone : எலும்புவழி ஒலி பரவல்; எலும்பு வழி; ஒலி கடத்தல் : காது எலும்பின் வழியாக உட்காதினுள் ஒலி அலைகள் செலுத்துதல்.

osteophyte : மூட்டுக் குதிமுள் : மூட்டு மேற்பரப்புகளின் விளிம்பு களில், எடுத்துக்காட்டாக எலும்பு மூட்டு வீக்கத்தின் போது ஏற்படும் குதிமுள் அல்லது புறவளர்ச்சி.

osteoplasty : எலும்பு மறு உருவாக்க அறுவை : எலும்பை மறு உருவாக்கம் செய்வதற்கான அறுவை மருத்துவம்.

osteoporosis : எலும்பு நோய், எலும்பு மெலிவுறல், எலும்புப் புரை : கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அடர்த்தி குறைதல். இதனால் முதுகு வளையும்; எலும்பு நலியும்; சிறிதளவு அழுத்தம் ஏற்பட்டாலும் எலும்பு முறிவு ஏற்படும். இது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றவுடனேயும், 75 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ஏற்படும். கால்சியம், வைட்டமின்-D குறைபாடு காரணமாக இது உண்டாகிறது.

osteosarcoma : எலும்பு தசைக்கட்டி : எலும்பிலிருந்து வளரும் ஒரு தசைக்கட்டி.

osteosclerosis : எலும்பு அடர்த்தி; எலும்பு கடினமாதல் : எலும்பின் அடர்த்தி அல்லது கெட்டித் தன்மை அதிகமாதல்.

osteosynovitis : மூட்டு உறை அழற்சி : மூட்டு உறைச்சவ்விலும், அடுத்துள்ள எலும்புகளின் எலும்புத் திசுக்களிலும் வீக்கம் ஏற்படுதல்.