பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

overtone

786

oxaluri


லாக்டிக் அமிலமும், கெட்டோ அமிலமும் பைக்கார்பனேட்டா ஆக்சிகரமாகும் போது லாக்டிக் அசிடோசிசிலும், கெட்டோசிடோசிசிலும் இது காணப்படும்.

overtone : மிகைத்தொனி : ஒரு கம்பி, ஒரு சரம், ஒரு வாய்க் கட்டை அல்லது மரச் சலாகையின் பாதிப் பகுதிகளின் அதிர்வினால் உண்டாகும் தொனி.

overuse syndrome : மிகைப் பயன்பாட்டு நோய் : தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைகள் ஆகியவற்றில் வீக்கம், வலி அல்லது செயலின்மை ஏற்படும்.

overweight : மிகை எடை : வயது, உயரம், உடல்வாகு ஆகியவற் றுக்குப் போதிய கழிவு செய்யப்பட்டபின்பு, உடல் எடை இயல்புக்கு அதிகமான அளவில் இருத்தல். உகந்த எடைக்கு 20% அதிகமாக இருந்தால் அது மிகை எடையாகும்.

ovum : சினை முட்டை; அண்டம்.

owl eye appearance : ஆந்தைக் கண் தோற்றம் : சுரப்பிக் காய்ச்சல் போன்ற நோயை உண்டாக்குகிற தேமல் கிருமிக் குடும்பத்தைச் சேர்ந்த டி.என்.ஏ உடைய நோய்க்கிருமிகளினால் உண்டாகும் நோயில் காணப்படும் உள்துகள். இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட தோலிழைம உயிரணுக்கள் எடுப்பாக விரிவடைந்தும், குருதிச் செவ்வணுக்களில் அளவுக்கு மீறி உள் துகள்கள் மருந்தும், ஒரு எடுப்பான முழுத்தாழெலும்பினால் சூழப்பட்டும் காணப்படும்.

oxacillin : ஆக்சாசிலின் : பென்சிலினேஸ் எதிர்ப்புச் சக்தியுடைய ஒரு பென்சிலின் நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது வட்ட பாக்டீரியாக்களை உண்டாக்கும் பென்சிலினேஸ் மூலம் ஏற்படும் கடுமையான தொற்று நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

oxalate : ஆக்சாலேட் : ஆக்சாலிக் அமிலத்தின் ஒர் உப்பு. பசளைக்கீரை, 'ருபார்ப்' என்ற செடி, தேயிலை போன்ற உணவாக உட்கொள்ளத்தக்க உணவுப் பொருள்களில் ஆக்சாலேட் உப்பு மிகுதியாக உள்ளது.

oxalic acid : ஆக்சாலிக் அமிலம் (வெல்லக்காடி) : நச்கத்தன்மை வாய்ந்த புளிங்காடி (அமில) வகை.

oxaluri : வெல்லப் படிகச் சிறுநீர் : கால்சியம் ஆக்சாலேட் என்ற வெல்லப் படிகங்கள் அடங்கிய