பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/793

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pacehionian..

792

pachyperiostitis


இதில் உள்ள மின்கலம் மூலம் கம்பி தூண்டுதல் பெற்று இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. இக்கருவி பொருத்தப்பட்ட சில நாட்களில் நோயாளிகளின் இதயம் மீண்டும் தானாகவே தன் பணியைத் தொடங்கிவிடும். இக்கருவி 10 ஆண்டுகள் வரை வேலை செய்யும்.

pacehionian corpuscles : பேக்கியோனியன் மெய்மங்கள் : இத்தாலிய உடற்கூறியிலாளர் ஏபேக்கியோனியின் பெயரைப் பெற்ற சிலந்திச் சவ்வின் விரல் துருத்தங்கள்.

pachyblepharon : திண் கண்ணிமை; தடி இமை : கண்ணிமைகள் திண்மையாக இருத்தல்.

pachycephalia : திண் மண்டை; தடி மண்டை : திண்மையான மண்டையோடு.

pachycephaly : தடிமண்டை : கபால எலும்புகள் இயல்புக்கு மீறித் தடித்தநிலை.

pachyehilia : திண் உதடு; தடி உதடு : உதடுகள் திண்மையாக இருத்தல்.

pachydermato coele : தடித் தோல்பை : 1. மிகுந்து தொங்கும் தோல் மடிப்புகள், 2. பெரும் நரம்புநார்க் கட்டி.

pachydermia : திண் தோல்; தடித்தோல்; சொரணையின்மை; ஊறுணர்ச்சியின்மை : தோல் திண்மை பெற்றிருத்தல் ஊறு உணர்ச்சி இல்லாதிருத்தல்.

pachydermoperiostosis : தடித்தோல் என்பு சுற்று : இயல்புக்கு மீறித் தடித்த தோலின் இயல்பான மடிப்புகள், தலைத் தோல், முகத்தோலின் மிகுந்த சுருக்கங்கள், கை, கால் உறுப்புகளின் சேய்ம எலும்புகள் தடித்தல் மற்றும் தடித்த விரல்கள்.

pachydermy : தடித்தோல் : தைராய்டு குறைவீக்கத்தில் உள்ள புரதம் மிகுந்த மியூசின் அல்லது பிட்யூட்டரி மிகை நோயிலுள்ள நெகிழா இணைத் தின்குவிப்பால் விலங்குத்தோல் போன்ற தோலடித் தடிப்பு.

pachyleptomeningitis : தடி மூளை உரையழற்சி : மூளை மற்றும் தண்டு வடத்தின் முருட்டுச் சவ்வும் மற்றும் மென் சவ்வும் அழற்சி.

pachymeningitis : மூளைச் சவ்வழற்சி : மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம்.

pachyperiostitis : எறும்பு தடித்தல்; நீள் எறும்பு அழற்சித் தடிப்பு; தடி என்பு சுற்றழற்சி : நீள் எலும்புச் சுற்றுச்சவ்வழற்சியின் விளைவாக பாதிக்கப் பட்ட எலும்புகள் தடித்தல்.