பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pachyperitonitis

793

paediatrician.


pachyperitonitis : தடி வயிற்றுள்ளுறையழற்சி : வயிற்றுள்ளுறை அழற்சியுற்றுத் தடித்தல்.

pachysalpingoovaritis : தடி, கருப்பைக் குழல் அண்டகவழற்சி : கருப்பைக்குழல் மற்றும் அண்டகம் நாட்பட்ட அழற்சியால் தடித்தல்.

pachytene : தடிப்பட்டை : குன்றற் பிரிவின் நிலைப்படி நிலையில் அமைப்பொத்த இனக் கீற்றுகள் இணையாவது முழுமையடைந்துள்ளது. அவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து நெடுக்கில் பிளந்து, நன்கு பின்னிப் பிணைந்த நிறமியன் தொகுதியாதல்.

pachyvaginalitis : தடியுறையழற்சி : விரையுறை அழற்சியுற்றுத் தடித்தல்.

pachyvaginitis : தடியோனியழற்சி : யோனியின் நாட்பட்ட அழற்சியால் யோனிச் சுவர்கள் தடித்தல்.

pacing : இதய முடுக்கி : இயல்பான இதய இயக்க முறையை நிலைப்படுத்தப் பயன்படும் மின்துடிப்புச் சீரமைவி.

pacinian corpuscles : பசினி மெய்மங்கள் : இத்தாலிய உடற் கூறியலாளர் ஃபிலிப்போ பசினியின் பெயராலமைந்த குறிப்பாக தோலிலுள்ள பெரும் உறையமைந்த தொடு உணர்வு ஏற்பிகள்.

pack : கட்டு : 1. உடலை ஒரு போர்வை அல்லது விரிப்பில் வைத்துச் சுற்றிக்காட்டுதல். 2. ஒரு குழிவறையை பஞ்சு அல்லது மென்வலைத் துணி கொண்டு நிரப்புதல்.

package insert : மருந்து விவரத்தாள் : ஒரு அறிவுறுத்தப்பட்ட மருந்துப் பொருளுடன் தரப்படும் பொருள் பற்றிய முழு விவரங்களைத் தரும் குறிப்புத் தாள்.

packed cell volume : அடர்ந்த சிவப்பணுப் பருமானம்.

packed red cells : சிவப்பு வடிவணு : ஒருபை இரத்தத்தில் பெருமளவு நீர்ப்பகுதி நீக்கப்பட்ட சிவப்பணுக்களின் ஒரளவுத்திரள்.

pad : திண்டு : 1. ஒரு பகுதி அல்லது உறுப்பை அழுத்த அல்லது அழுத்தம் நீக்கப் பயன்படும், ஒரு மென்பொருள் திண்டு. 2. சதை போன்ற கொழுப்புதிறன்.

pad sign : திண்டமைக் குறி : பேரியம் உணவு எக்ஸ்ரே படத்தில், கணையத் தலைப்புற்றால் முன்சிறுகுடல் வளைவு திண்ட மைந்து தோன்றும் குறி.

paediatric : குழந்தை மருத்துவத் தொடர்புடைய.

paediatrician (paediatrist) : குழந்தை மருத்துவர் : குழந்தை