பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/799

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pacreatectomy

798

pancrex


மானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால்பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும், சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறு குடலில் கொழுப்புகளையும் செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன.

pacreatectomy : கணைய அறுவை; கணைய எடுப்பு; கணைய துணிப்பி : கணையத்தை முழுவதுமாக அல்லது அதன் ஒரு பகுதியை அறுத்து எடுத்து விடுதல்.

pancreatic : கணையம் சார்ந்த.

pancreatic digestion : கணையச் செரிமானம்.

pancreatic extract : கணையச் சாரம்.

pancreatic function test : கணைய இயக்கச் சோதனை : இதில் லாவின் குழாய்கள், இரைப்பைக்குள்ளும், முன் சிறுகுடலின் இரண்டாம் பகு திக்குள்ளும் செருகப்படுகிறது. முன் சிறுகுடலின் உயிர்ப் பொலியை பகுப்பாய்வு செய்து, கணையச் சுரப்பியின் பல்வேறு இயக்கு நீர்த் தூண்டுதல்களின் விளைவுகள் அளவிடப்படுகின்றன.

pancreatic juice : கணைய நீர்.

pancreaticoduodenostomy : கணைய முன் சிறுகுடல் துளைப்பு : கணைய நாளத்தை முன் சிறு குடலில் வேறொரு இடத்தில் ஒட்டியிணைத்தல்.

pancreatin : கணைய நீர்மம் : கணயத்திலிருந்து எடுக்கப்படும் செரிமானப் பொருள்களின் (என்சைம்) ஒரு கலவை. கணைய நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

pancreatitis : கணைய அழற்சி : கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது.

pancreatoduoclenectomy : கணையமுன் சிறுகுடல் அறுவை நீக்கம் : கணையத்தின் தலைப் பகுதியையும் அத்துடன் அதைச் சுற்றியுள்ள முன் சிறு குடல் வளைவையும் அறுத்து நீக்குதல்.

pancreozymin : கணைய சுரப்பு ஊக்கி : முன்சிறுகுடல் சவ்வுப் படலத்தில் கரக்கும் ஒர் இயக்குநீர் (ஹார்மோன்). இது கணையச் செரிமானப்பொருள்கள், குறிப்பாக, அமிலேஸ், சுரப்பதைத் தூண்டுகிறது.

pancrex : பாங்கிரக்ஸ் : கணைய நீர்மத்தின் (பாங்கிரியாட்டின்) வணிகப் பெயர்.