பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adrenopause

79

advancement


விடும். மூளை இயக்கம் இயல்பாக இருப்பதில்லை. தண்டுவட நரம்புகள் சிதைவடைந்து புற நரம்பு இயக்கத்தடை உண்டாகும்.

adrenopause : அண்ணீர் சுரப்புக் குறை.

adrenostatic : அண்ணீர் சுரப்புக் குறைப்பி.

adrenotoxin : அண்ணீர் நச்சு : அண்ணீரகச் சுரப்பிக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்.

adriamycin : அற்றியாமைசின் : 'டாக்சோரூபிக்கன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Adson's test : அடிசன் பரிசோதனை; கழுத்து விலா எலும்புப் பரிசோதனை : பாதிப்பு உள்ள பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, இயன்ற அளவிற்குக் கழுத்தை நிமிர்த்தி, மூச்சை உள் இழுத்தால், அப்பக்கத்தில் உள்ள கையில் நாடித்துடிப்பு மறைந்துவிடும், கை வலிக்கும். இப்பரி சோதனை கழுத்துவிலா எலும்பு உள்ளவர்களுக்கு செய்யப்படும்.

adsorbate : அகத்துறிஞ்சு பொருள்.

adsorbents : உறிஞ்சி; (ஆவி); உறிஞ்சிகள்; உறுஞ்சு தன்மைய : தங்கள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள்கிற திடப்பொருள்கள். கட்டைக்கரி, வாயுக்களை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக்டீரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது.

adsorption : உறிஞ்சுதல்; ஆவியை உறிஞ்சுதல்; புறத்துறிஞ்சல்; மேலீர்ப்பு : தனது மேற்பரப்பிலுள்ள ஒரு வாயுவை, திரவத்தை அல்லது திடப்பொருளை கரைசலாகவோ மிதவலாகவோ உறிஞ்சி வைத்துக் கொள் வதற்கு ஒரு பொருளுக்கு உள்ள பண்பு.

adult : முழுப்பருவம்; பருவமுற்றோர் : முழு வளர்ச்சியடைந்தவர், முழுமையான வளர்ச்சி கண்டிருக்கும் ஒர் உயிர்ப்பொருள்.

adulteration : கலப்படம் : பொருளைத் தயாரிக்கும் பொழுது அப்பொருளுடன் அசுத்தமான, மலிவான, அல்லது நச்சுத் தன்மை கொண்ட மற்ற பொருள்களையும் சேர்ப்பது. (எ-டு) உணவுக் கலப்படம். உணவுத் தானியங்களில் குறு மணலைச் சேர்ப்பது.

adultration : கலப்படம்.

advancement : மாறுகண் அறுவை மருத்துவம் : மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார்வை) சீர்படுத்துவதற்காகச்