பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/801

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

panic attack

800

Papaincolaou test


panic attack : திகில் தாக்கம் : தானியங்கி நரம்பியக்க விளைவுகளும் பேரச்ச உணர்வு மிகுதியோடு கவலையும் திடீரென்று விட்டுவிட்டு தீவிரமாகத் தாக்குதல்.

panniculectomy : கொழுபடல அறுவை நீக்கம் : உடல் பருமனானவர்களில் வயிற்றுக் கொழுப்பை அறுத்து எடுத்தல்.

panniculitis : கொழு படல அழற்சி : வயிற்றுமுன் சுவரின் தோலடிக் கொழுப்பழற்சி.

pannus : விழி வெண்படலச் சுருக்கம்; மரை படலம் : விழி வெண்படலம் குழாய்போல் சுருக்கமடைதல். இது பெரும்பாலும் இமைப்படல எரிச்சலுடன் தொடர்புடையது.

panography : அகல்பரப்பு படவரைவு : ஒரே படத்தில், முழு பல்தொகுதியையும் முழுமையாகக் காட்சி பெற பயன்படுத்தும் எக்ஸ்ரே படமெடுக்கும் தொழில்நுட்பம்.

panopthalmitis : விழித் திசு அழற்சி; முழுக்கண்ணழற்சி : கண் விழியின் திசுக்கள் அனைத்திலும் ஏற்படும் வீக்கம்.

panosteitis : எலும்பு வீக்கம் : எலும்பு மச்சை, எலும்புத் திசு, எலும்புகளை மூடியுள்ள சவ்வு போன்ற எலும்பின் அமைப்பான்கள் அனைத்தும் வீக்க மடைதல்.

pant : மூச்சுத் திணறல்.

pantigridle syndrome : கணுக்கால் வீக்கம் : இறுக்கமான குறுங்கால் சட்டை அணியும் பெண்கள் உட்கார்ந்தே ஒரு நாள் வேலை செய்தபிறகு, அவர்களின் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கம்.

pantothenic acid : பேண்டோத்தெனிக் அமிலம் : வைட்டமின் பி. தொகுதியின் ஒருகூறு.

PAO : உச்ச அமில உற்பத்தி.

pO2 : நுரையீரல் தமனி ஆக்சிஜன் பூரிதம் : நுரையீரல் தமனி ஆக்சிஜன் பூரிதம் மற்றும் அழுத்தம்.

papain : பேப்பெயின் : புரதங்களையும் பாலிபெட்டைடுகளையும் (அமைனோபுரதங்கள்) நீராய் பகுப்பு செய்ய கிரியா ஊக்கியாகப் பயன்படும், ஒருவகை பப்பாளியிலிருந்து கிடைக்கும் புரதப்பிளப்பு நொதி.

Papaincolaou test : பெப்பானி கோலோ சோதனை : பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்தின் மாதிரி எடுத்து அணுச் சோதனை செய்தல்.