பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/805

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parahaemophilia

804

paralyticileus


வழியாக வெளியேற்றப்படுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து தண்ணீரில் முட்டைப் புழுக்கள் வெளிப்பட்டு புது நீர் நத்தைகளில் நுழைகின்றன. நத்தையிலிருந்து வெளிப்படும் முட்டைப்புழு நண்டுகளில் நீர்க்கட்டி வடிவம் பெறுகின்றன. அந்த நிலையில் அவை அப்படியே அல்லது சரியாக சமைக்காமல் உண்பவர்களை புழுக்கள் மொய்க்கின்றன.

parahaemophilia : குருதி ஒழுக்கு நோய் : குருதியுரைகாரணி 2 ஹவால் பரம்பரை குருதி ஒழுக்குத்தன்மை.

parainflunenzavirus : ஊனீர் நோய்க் கிருமி : ஊனீர் நோய்க் கிருமிகளில் ஒன்று. இது மேல் மூச்சுக் கோளாறினை உண்டாக்குகிறது வைரஸ் கிருமிகளில் ஒருவகை.

parakeratosis : தோல் அசைக்கரு முன்படலப் பாவல்.

paralaia : பேச்சொலி பிறழ்வு; பிதற்றல் : ஒரு எழுத்தை வழக்கமாக மாற்றி உச்சரிக்கும் பேச்சுக் குறை.

paraldehyde : பாரால்டிஹைட் : தூக்கமுட்டும் இயல்புள்ள ஒரு திரவம். குளோரால் ஹைட்ரேட் போன்ற குணமுடையது. ஆலிவ் எண்ணெய்க் கரைசைலாக வாய்வழியாகவும் நரம்பூசி வழியாகவும் கொடுக்கப்படுகிறது. இப்போது இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளுக்கு மயக்கமூட்டப் பயன்படுகிறது.

parallergy : பர ஒவ்வாமை : ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக் கிப்பொருளால் மிகுஉணர்வுக்கு ஆட்பட்டதால், எந்த ஒரு தூண்டலாலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உடலின் ஒவ்வாமை நிலை.

paralysis : முடக்குவாதம்; பக்கவாதம்; வாதம் செயலிழப்பு : நரம்பு செயலிழப்பதன் காரணமாக உடலின் ஒரு பகுதி முழுமையாக அல்லது பகுதியாகச் செயலிழத்தல். இது உணர்வு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இயக்கு நரம்பு சார்ந்ததாகவோ அல்லது இரண்டும் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

paralytic : வாதநோயாளி; வாத : முடக்குவாத நோய் உடையவர்; பக்கவாத நோயாளி; இயக்க ஆற்றல் இழந்தவர்.

paralyticileus : குடலியக்கக்குறை : வயிற்றறுவை, வயிற்றுள் ளுறையழற்சி பொட்டாசியக் குறைகுருதி நிலை போன்ற மின் அயனிப் பிறழ் நிலைகளில் குடலி அலைவியக்கம் குறை படும் அல்லது தடைபடும் நிலை.