பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/809

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parasympathetic ner.

808

parathyroidectomy


ஆண் குறித்தண்டின் ஒரு பக்கப் பகுதியில் திறக்கும் பிறவிக் கோளாறு.

parasympathetic nervous system : இணைப் பரிவு நரம்பு மண்டலம் : மைய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த மண்டையோடு மற்றும் இடுப்புக் குழி இணை எலும்பு சார்ந்த நரம்புகள் சிலவற்றிலிருந்து வரும் தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி.

parasympatholytic : துணைப்பரிவு நரம்புச் சமன மருந்து : துணைப்பரிவு நரம்பு மண்டலத் தூண்டுதலை சமனப்படுத்தும் மருந்து.

parasynapsis : பக்க இணைப்பு : குன்றல் பிரிவின்போது இன நிறக் கீற்றுகள் பக்கம் பக்கமாக ஒன்றிணைதல்.

parasystole : பர(பக்கச்) சுருக்கம் : வழக்கமான முறையான இதயத் துடிப்புக்குக் காரணமான இதயப் பகுதியைத் தவிர்த்த துணையதிக தூண்டல் மூலம்.

parathion : பாராத்தியான் : ஒரு கரிமப் பாஸ்ஃபேட் வேளாண் மையில் ஒரு பூச்சிகொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. கோலினெஸ் டிராசுக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்படக் கூடியது. இதனாலேயே மனி தருக்குக்கேடு விளைவிக்கக் கூடியது.

parathormone : பாராத்தோர்மோன் : துணைக்கேடயச் சுரப்பியில் சுரக்கும் ஓர் இயக்கு நீர் (ஹார்மோன்). இது, இரத்தத்தில் கால்சியத்தின் அளவைச் சமனப்படுத்துகிறது.

parathyroid : பேராதைராய்டு : 1. தைராய்டு சுரப்பிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 2. தைராயிடு சுரப்பிப் பொருளுக்குள் பொதிந்துள்ள அல்லது அதன் கீழ் ஒரம் அல்லது பின் பகுதியில் அமைந்துள்ள நான்கு சிறு நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்று. கால்சியம், ஃபாஸ்பரஸ் வளர்சிதையத்தை ஒழுங்குபடுத்தும் பேராதைராயிடு இயக்குநீரை, அவை சுரக்கின்றன.

parathyroid glands : துணைக் கேடயச் சுரப்பிகள்; இணைத் தைராய்டுச் சுரப்பிகள் : கேடயச் சுரப்பியின் பின்புறப்பரப்பில் உள்ள நான்கு சிறிய நாள மில்லாச் சுரப்பிகள். இது, பாராத்தோர்மோன் என்னும் இயக்குநீரைச் (ஹார்மோன்) சுரக்கிறது.

parathyroidectomy : துணைக் கேடயச் சுரப்பி அறுவை : துணைக்கேடயச் சுரப்பிகளில் ஒன்றை அல்லது அதற்கு மேற்