பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/811

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parenteral

810

parkinsonism


parenteral : வழியாயல்லாத : செரிப்புமண்டல வழியாயல்லாமல் வேறு வழியில் உடலுக்குள், மருந்துகள், ஊட்டப் பொருட்கள் அல்லது மற்ற பொருட்களை செலுத்துவது.

parenteral fluid therapy : சிரைவழித் திரவ மருத்துவம்; ஊசி மூலம் மருந்தேற்றல் : இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் நுண்மம் நீக்கிய ஒரு கரைசல் இறக்கும் குழாயினை ஒரு பெரிய மையச் சிரையில் உள்ள செருகி சொட்டுச் சொட்டாகச் சத்துப்பொருள் உட் செலுத்தப் படுகிறது. வினாடிக்கு எத்தனை சொட்டு செல்கிறது என்பதை ஒர் இறைப்பான் கட்டுப்படுத்துகிறது.

paresis : அரைகுறை முடக்கு வாதம்; தசைவாதம்; ஊனவாதம்; இயக்கக் குறைவு : தசை இயக்கத்தை மட்டும் தடைசெய்து, உணர்ச்சியைத் தடைசெய்யாத பக்கவாதம்.

paresthesia : பரௌணர்வு நிலை : தோலில் கூரிய கூச்ச உணர்வு. ஊசியால் குத்துவது போன்ற உணர்வு.

parietal : உச்சி மண்டை எலும்பு : மண்டையோட்டின் உச்சிப்பக் கங்களுக்குரிய இணை எலும்புகளுள் ஒன்று.

parietal bone : மண்டையுச்சிப் பக்க எலும்பு : மண்டையோட்டின் பக்கங்களுக்குரிய இணை எலும்புகள்.

parietofrontal : மண்டையோட்டின் உச்சிப்பக்க : முன் தலை நெற்றி எலும்புகள், மூளை மடிப்புகள், பிளவுகள் தொடர்பான.

Parinaud's syndrome : பரிநாடு நோயியம் : ஃபிரெஞ்சு கண் மருத்துவர் ஹெச்பரினாடு பெயரால்மமைந்த நடுமூளை நோய் நிலையால், விரும்பிய படி பார்வையிலேயோ அல்லது கீழோ திருப்பமுடியாத நிலை.

parite : பரிட்டே : தமனி நார் இறுக்கத்தில் தமனிக்குள்ள கொழுநார்ப்படிவு.

parity : பேற்றுமை : ஒரு பெண் பெற்றுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவளது தகுநிலை.

parkinsonism : பார்க்கின்சன் நோய் அசையா நடுக்கம் : உரு