பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/812

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Parkinson's disease

811

parosmia


மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு ஏற்படுகிறது. காயம், நரம்பு நலிவு, நச்சுப் பொருள் தாக்கம் போன்றவற்றினாலும் இது உண்டாகலாம். மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படுவதால் விளையும் நோய்.

Parkinson's disease : பார்க்கின்சன் நோய் : மெதுவாகப் பரவும் சிறு நடுக்கம், தசை பலவீனம் மற்றும் விரைப்பு நிலை விநோதமான நடை ஆகிய அறிகுறிகள் காட்டும் நாட்பட்ட நரம்புநோய். பிரிட்டிஷ் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.

parnate : பார்னாட் : டிரானில் சைப்ரோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

paromomycin : பேரமோமைசின் : அமீபியாசிஸ் நோய் மருத்துவத் துக்குக் கொடுக்கப்படும் அமீனோ கிளைக்கோசைடு வகை சேர்ந்த நோயுயிர் எதிர்ப்பிகள்.

parotid : காதுமுன்புறச் சுரப்பி.

paromychial : நகச்சுற்றி; நகத்தடி; சீழ்க்கட்டி : நகப்படுகை சார்ந்த அல்லது நக ஒரத் திசுக்களின் அழற்சி சார்ந்த.

partial mastectomy : பகுதி மார்பக அறுவை நீக்கம் : மார்பகப் புற்று நோய்க்காக, தோல், சுற்றியுள்ள திசுக்களின் ஒரு பகுதி, அடியிலுள்ள தசை களுடன் சேர்த்து மார்பகத்தை அறுத்து நீக்குதல்.

partial seizure : பகுதி நோய்ப் பிடிப்பு : மூளையின் ஒரிட இயல்பு மாறிய மின் வெளிப்பாட்டால், உடம்பின் அல்லது மனவியக்கப் பகுதி பாதிப்பு.

particle : துகள் : ஒரு பொருளின் மிகச் சிறிய பகுதி அல்லது துண்டு.

parotid : காதுமுன்புறச் சுரப்பி.

parotidectomy : காதருகுச் சுரப்பி அறுவை : காதருகுச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

parosmia : நுகர்வுப் பிறழ்ச்சி; வேற்று முகர்வு; திரிபு நுகர்வு : முறை திறம்பிய நுகர்வு (மண) உணர்வு. பெரும்பாலும மயங்கச் செய்யும் தன்மையுடையது.