பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parotid gland

812

parvicellular


parotid gland : காதருகுச் சுரப்பி; எச்சில் சுரப்ப;, கன்னச் சுரப்பி :

காதின் இரு புறங்களிலும் காதுக்கு முன் புறத்தில் கீழே அமைந்துள்ள எச்சில் சுரப்பி.

parotitis : பொன்னுக்கு வீங்கி; புட்டாளம்மை : காதருகுச் சுரப்பியில் அல்லது எச்சில் சுரப்பியில் ஏற்படும் அழற்சி.

paroven : பாரோவென் : டிராக் செருட்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

paroxysm : வலிப்பு; இசிப்பு : திடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு.

parot's nodes : நெற்றிப்புடைப்பு : பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்).

parstelin : பார்ஸ்டெலின் : டிரானில்சைப்ரோமின், டிரைஃ புளுவோப்பாராசின் இரண்டும் கலந்த கலவையின் வணிகப் பெயர்.

parthenogenesis : கன்னியினப்பெருக்கம் : பாலினக் கூட்டு இல்லாமல் நடைபெறும் இனப் பெருக்கம்.

partial pressure : ஓரளவு அழுத்தம் : வாயுக்களின் ஒரு கலவையில் செறிவுக்கு வீத அளவில் கொடுக்கப்படும் அழுத்தம், பகுதி அழுத்தம்.

parturient : மகப்பேறு சார்ந்த பேற்று : பிள்ளைப்பேறு சார்ந்த கருவுயிர்ப்பு சார்ந்த.

parturiometer : கருப்பைச் சுருக்கமானி : குழந்தை பிறப்பின் போது கருப்பைச் சுருக்கங்களின் வேகத்தை அளவிட உதவும் கருவி.

parturition : மகப்பேறு; பேறு; பிறப்பு : பிள்ளைப்பேறு குழந்தைப்பேறு.

parullis : பருலிஸ் : பல் ஈறில் எலும்புச் சுற்றுள் சீழ்க்கட்டி.

parvicellular : பர்விசெல்லூலர் : சிறுஅளவு உயிரணுக்களாலான அல்லது தொடர்பான.