பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/817

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pathway

816

pearl


pathway : பாதைவழி : 1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்கும் வேதியியல் மறுவினைகளின் வரிசை முறை.

patient : நோயாளர்; நோயர் : ஒருநோய் அல்லது பாதிப்பால் துன்பப்பட்டு, மருத்துவம் மேற்கொள்ளும் ஒருவர்.

patient compliance : நோயாளி இணக்கம் : ஒரு நோயாளி மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க, குறிப்பிட்ட மருந்தை குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்டவழியே உடலுக்குள் செலுத்துதல்.

patrilineal : தந்தை வழி : தந்தை வழியாக வந்த.

patulous : திறந்த; விரிந்த.

Paul-Bunnell test : பால் புன்னல் சோதனை : அமெரிக்க மருத்து வர்களான ஜான்பால்வ மற்றும் வால்ஸ் புன்னல் பெயரால மைந்த சோதனை. சுரப்பித் தொற்றுக் காய்ச்சலில் குருதி நீரிலுள்ள வேற்றுவினை எதிர்மியத்தைக் கண்டுபிடிக்கும் சோதனை.

Paul Mikulicz operation : பெருங்குடல் அறுவை : பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் சுவரை அதற்குமேல் அதைச் சுற்றிதைத்து, ஒரு கால இடை வெளிக்குப் பிறகு நோயுற்ற பகுதியை மட்டும் வெட்டி அகற்றி விடுதல்.

pavulon : பாவுலோன் : பான் குரோனியம் புரோமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

PCM : புரதக்குறைபாடு : புரதக் கலோரி ஊட்டச் சத்துக் குறைபாடு.

peak expiratory flow rate : சுவாசக் காற்று வீதம் : ஒரு வினாடி நேரத்தில் உட்சுவாசிக்கப்படும் காற்றின் அளவை அளவிடுதல்.

pearl : பியர்ல் : 1. ஆவியாகும் அமைல் நைட்ரைட் கொண்ட ஒரு சிறு மெல்லிய கேப்சூல். அதை ஒரு கைக்குட்டையில் நசுக்கி உள்ளிழுக்க வேண்டும். 2. முச்சுக்குழாய் ஆஸ்துமா நோயில் உண்டாகும் உருண்டு தடித்த சளித்திரள்.