பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aerobiosis

81

aerosol


சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை.

aerobiosis : ஆக்சிஜன் வழி உயிர்வாழ்வு : ஆக்சிஜனைக் சுவாசித்து உயிர் வாழ்க்கை நடத்துதுல்.

aerocolpos : காற்றுப் புணர்புழை.

aerodermectasia : தோலடிக் காற்றேற்றம்.

aerodontalgia : உயிர்சூழல் பல்வலி; குறை அழுத்துச் சூழல் பல்வலி : சுற்றுச்சூழல் காற்றழுத்த மாறுபாடுகளால் பற்களில் வலி ஏற்படுதல்.

aerodromophobia : வான்வழிப் பயண அச்சம்.

aerodynamics : காற்றியக்கவியல்.

aeroembolism : இரத்தநாளக் காற்றடைப்பு : காற்று அல்லது வாயுப்பொருள் இரத்த நாளத்தை அடைத்துக் கொள்ளல்.

aeroemphysema : காற்றேற்ற நோய்.

aerogastria : காற்று இரைப்பை.

aerogenous : காற்று உற்பத்தி செய்கிற.

aeromedicine : வான்நோய் மருத்துவம்.

aerometer : காற்றுப் பண்பளவி.

aerodontalgia : உயர் சூழல் பல்வலி.

aerophagy : காற்றுண்ணி.

aerootitis : காற்றேற்றக் காது அழற்சி : காற்றழுத்த மாறுபாடு களால் உண்டாகின்ற காது அழற்சி.

aeropathy : காற்றழுத்த நோய் : சுற்றுப்புறச் சூழலில் காற்று அழுத்த வேறுபாடு ஏற்படும் போது அதன் விளைவாக மனிதனுக்கு உண்டாகின்ற நோய்.

aerophagia, aerophagy : காற்று மிகை ஈர்ப்பு : காற்றினை அளவுக்கு மிகுதியாக உள்ளே ஈர்த்துக் கொள்ளுதல்.

aerophobia : கடுங்காற்றச்சம்.

aeroplankton : கற்று நுண் உயிர்கள்.

aeroplethysmograph : கற்றுக் கொள்ளளவு ஆய்வுக்கருவி : மனிதனின் உடல் கொள்ளளவு மாற்றுங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவனுடைய சுவாசப்பைக் கொள்ளளவை நிர்ணயிக்கும் ஒருபரிசோதனை முறை.

aerosol : தூசிப்படலம், புழுதிப் படலம் : வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்குவதற்கும், பூச்சிகளைக்