பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/823

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

panniculectomy

822

peptides


செயற்படக்கூடிய பார்பிட்ரேட்டுகளில் ஒன்று. குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு கொடுக்கப்படுகிறது.

pentose : பென்டோஸ் : தன் மூலக் கூறுகளில் ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள ஒற்றைச் சர்க்கரைச் சேர்மங்களில் ஒன்று.

pentosuria : சிறுநீர்ச் சர்க்கரை : சிறுநீரில் பென்டோஸ் (சர்க்கரை) இருத்தல். இது வளர்சிதை மாற்றக் கோளாறினால் உண்டாகலாம்.

pentothai : பென்டோத்தால் : தையோபென்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

peotillomania : ஆண்குறி இழு மனப் பிறழ்ச்சி : ஆண் குறியை எப்போதும் இழுத்துப் பார்க்கும் நரம்பு மனப்பழக்கம்.

peplos : பெப்லோஸ் : நச்சுயிர் பகுதிகளைச் சூழ்ந்துள்ள கொழு புரத உறை.

peppermint : தைலமணவில்லை : சிறந்த தைலமண மூட்டப்பட்ட இனிப்புத் திண்பண்டவில்லை.

pepsin : இரைப்பை என்சைம் : இரைப்பையில் சுரக்கும் சாற்றில் கலந்துள்ள புரதத்தைச் செறிக்கும் ஆற்றலுடைய நொதி.

pepsinogen : பெப்சினோஜன் : இரைப்பைச் சவ்வுப் படலத்தின் உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு சைமோஜன். இது, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் (இரைப்பை அமிலம்) அல்லது பெப்சினுடன் கலந்து இரைப்பை நொதியாக (பெப்சின்) மாறுகிறது.

peptic : சீரணப் பாதைப் புண்; குடற்புண்; இரைப்பைப் புண் : இரைப்பை நொதியுடன் (பெப்சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப்பாதைப் புண்ணைக் குறிக்கிறது. இது பொதுவாக இரைப்பையில் அல்லது முன்சிறு குடலில் ஏற்படுகிறது. சில சமயம், கீழ் உணவுக் குழாயிலும் உண்டாகும்.

peptic ulcer : முன்சிறுகுடல்புண்.

peptidergic : பெப்டிட்ர்ஜிக் : சிறு பெப்டைடு மூலக்கூறுகளை நரம்புக் கடத்திகளாகப் பயன்படுத்தும் இழைகளின் நரம்பணுக்களைக் குறிக்கிறது.

peptides : பெப்டைடுகள் : குறைந்த மூலக்கூற்று எடையுள்ள கூட்டுப் பொருள்கள் இவை நீரால் பகுத்தலின்போது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களை கொடுக்கின்றன. இவை டைபெப்டைடுகள், டிரைபெப்டைடுகள், பாலிபெப்டைடுகள் ஆகும்.