பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/827

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perichondrium

826

perilabyrinthitis


perichondrium : குருத்தெலும்புச் சவ்வு; குருத்தெலும்பு சுற்றுச் சவ்வு : கணு நீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதையும் மூடிக்கொள்ளும் சவ்வு.

pericoric : பெருங்குடல் சூழ்ந்த : பெருங்குடலைச் சுற்றியுள்ள.

pericranium : மண்டையோட்டுச் சவ்வு; மண்டையோட்டுறை : மண்டையோட்டைமூடிக்கொண்டு இருக்கும் சவ்வு, மண்டையோட்டுப் புறச்சவ்வு.

pericyazine : பெரிக்சையசின் : ஃபெனோத்தையாசின் வழிப் பொருள்; இது குளோர்.புரோ மாசைனைவிட வலுவானது.

pericyte : சிறு தமனிசூழ் மின்திசு : தந்துகிச்சுவரின் வெளிப்பக்கத் துக்கு மிக அருகிலமைந்துள்ள ஒருநீளச் சுருங்கணு.

perisderm : மேந்தோலணுப் படலம் : முதிர்கரு மேந்தோலை முடியுள்ள, ஒரு மெல்லிய தட்டை அனுப்படலம், குழந்தை பிறப்பதற்கு முன்பே மறைந்து விடுகிறது.

peridesmium : பெரிடெஸ்மியம் : ஒரு பிணையத்தை மூடியுள்ள இணைப்புத் திசுப்படலம்.

peridiverticulits : புறப்பைச் சுற்றழற்சி : குடல்புறப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perienteritis : குடல் சுற்றழற்சி : குடலை மூடியுள்ள வயிற்றுள் ளுறையழற்சி.

perifollicular : மயிர் மூட்டுப்பை சூழ்ந்த : ஒரு மயிர்க்கால் நுண் சுரப்பியைச் சுற்றியுள்ள.

perifolliculitis : நுண்சுரப்புச் சுற்றழற்சி : மயிர் நுண்சுரப்பிகளைச் சுற்றுத் திசுவழற்சி.

perigastritis : இரைப்பை சுற்றழற்சி : இரைப்பை சுற்றியுள்ள வயிற்றுள்ளுறையழற்சி.

perihepatitis : கல்லீரல் சுற்றழற்சி : கல்லீரலைச் சுற்றியுள்ள வயிற் றுள்ளுறையழற்சி.

perikaryon : பெரிகரியோன் : 1. உயிர்க்கருவைச் சூழ்ந்துள்ள அணுக்(கூழ்மம்) கணியம். 2. அச்சிழை மற்றும் இழைமப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நரம்பணுவின் அணு மெய்மம், 3. பல்லுரு இழை தவிர்த்த, (வேர்க்) காழ்க் கருக்கள்.

perikymata : பெரிக்கைமாட்டா : புதிதாக முளைத்த பற்களின் சிப்பியின் மேல் காணப்படும் கணக்கற்ற குறுக்குக்கோட்டுக் குழிவுகள்.

perilabyrinthitis : பெரிலாபிரிந்திட்டீஸ் : உட்செவிவளைகுழல மைப்பைச் சூழ்ந்துள்ள திசு வழற்சி.