பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/833

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peritonsillar abscess

832

permeability


peritonsiilar abscess (quinsy) : தொண்டைச் சதை அழற்சி; தொண்டைச் சதை சுற்றுச் சீழ்க்கட்டி; தொண்டை வீக்கம்; உள்நாக்குப் பழுப்பு : தொண்டைச் சதையிலும், அதைச் சுற்றியுள்ள நெகிழ்வான திசுக்களிலும் ஏற்படும் கடும் அழற்சி.

peritrichous : பெரிட்ரிகோஸ் : சுற்றிழை கொண்ட தனது வெளிப் பரப்பு முழுவதிலும் இழைகளை அல்லது கசையிழைகளைக் கொண்ட நுண் உயிர்.

perityphlitis : குடல்வால் அழற்சி.

periumbilical : தொப்புள் சூழ்ந்த; உந்திச்சுற்று : தொப்புளைச் கற்றியுள்ள.

periurethral : சிறுநீர் வழி உறை சார்ந்த : சிறுநீர் வழி உறையைச் சுற்றியுள்ள.

periurethrałabscess : சிறுநீர் வழி உறை புறச் சீழ்க்கட்டி.

periurethritis : சிறுநீர்த்தாரைச் சுற்றழற்சி : சிறுநீர்த்தாரையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perivaginitis: யோனிச்சுற்றழற்சி : யோனியைச் சுற்றியுள்ள பகுதி களின் அழற்சி.

perivascular : குருதி நாளம் சூழ்ந்த; குருதிக் குழாய்க்ச் சூழல் : ஒரு குருதிநாளத்தைச் சுற்றி உள்ள.

perleche : உதடு நக்குதல்; கோட்டு வாய்ப்புண் : உதடு சிதை வுறுதல், உதட்டில் பொருக்குப் படர்தல் காரணமாக உதட்டை நாக்கால் நக்கிக் கொண்டிருத்தல். இது தெற்றுப் பல், பாக்டீரியா நோய், வைட்ட மின் பற்றாக்குறை, கை சூப்புதல் காரணமாக ஏற்படலாம்.

perivasculitis : நாளச்சுற்றழற்சி : ஒரு குருதி நாளத்தை சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perivesicle : பைச்சுற்று : பையை குறிப்பாக சிறுநீர்ப்பையைச் சுற்றிலும்.

perivesiculitis : சவ்வுப்பைச் சுற்றழற்சி : விந்துப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி.

perixenitis : வெளிப்பொருள் சுற்றழற்சி : ஒரு திசு அல்லது உறுப்புக்குள் உள்ள வெளிப்பொருளைச் சுற்றிலுமுள்ள அழற்சி.

perlingual : நாவழி : நாக்கு வழியாக மருந்தைச் செலுத்துதல்.

permeable : ஊடுருவ இடம் தரும் : கரைசலிலுள்ள பொருள் அல்லது நீர்மங்கள் ஊடுசெல்ல அனுமதிக்கும்.

permeability : ஊடுருவும் தன்மை; ஊடுருவு திறன்; ஊடியல்பு : உடல் திரவங்களில் கரைந்து உள்ள பொருள்கள் உயிரணுக்களின் இழைமங்களின் அல்லது