பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/835

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

persantin

834

passary


persantin : பெர்சான்டின் : டைப்பிரிடாமோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

perseveration : தொடர்தூண்டல் : ஒரு மூளை நோயின் காரணமாக ஒரு புதுத்தூண்டல் வந்த பிறகும், முன் தூண்டலுக்கு விளைவுகள் தொடருதல்.

persistent vegetative state : தொடர்ந்து மரம் போலிருநிலை : நோயாளி படுத்தபடுக்கையாயிருந்து எந்த உணர்வும் வெளிப்பாடும் இல்லாமல் உணவு தருவதை உண்டு மூச்சும், இதயமும் மட்டும் இயல்பாய் இயங்க மூளையின் உணர்வியக்கம் தொடர்ந்து இல்லாமல் இருப்பது. உயிரிருந்தும் இல்லாதது போன்ற நிலை.

persona : (பிறர்) ஆவனம் : ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு வெளிப்படும் ஆளுமை.

personality : ஆளுமை; தன்மை; பண்பியல் தொகுப்பு : ஒரு மனிதரை வேறுபடுத்திக்காட்டும் அவரது பல்வேறு மனப்போக்குகள் மற்றும் குண இயல்புகள். தனிமனிதப் பண்புகளின் மொத்தத் தொகுதி.

perspiration : வியர்த்தல்; வியர்வை : இயல்பான வியர்வை, வியர்வைச் சுரப்பிகளிலிருந்து தோல் துளைகளின் வழியாக வியர்வை வெளியேறுதல்.

perthes' disease : தொடை நாளச் சிதைவு : தொடை சார்ந்த நோயில் குழாய் நாளச் சிதைவு ஏற்படுதல். தொடை முனையில் திரிபு ஏற்பட்டு மூட்டிணைப்பு மாறுதல்கள் ஏற்படலாம்.

persuation : அறிவுறுத்தி இணங்க வைத்தல் : அறிவுறுத்தி, அல்லது விவாதித்து, நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தல்.

perturbation : அமைதியின்மை : அமைதிக்குலைதல் அல்லது உணர்ச்சிக் கிளர்ச்சி.

pertussis : கக்குவான்; கக்கு இருமல்; கக்குவாான் நுண்ணுயிர் : குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவகை இருமல் நோய். இது ஒரு தொற்று நோய். கடுமையாக உள் மூச்சு வாங்கி ஈளை இருமல் ஒலி உண்டாகும்.

pertussoid : கக்குவான் இருமல் : 1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல்.

per vias naturrales : இயல்பான வழிகளின் வழியாக.

pes : பாதம் போன்ற; அங்கால்; பாதம் : பாதம் போன்ற கட்டமைவு.

passary : அல்குல் வாயில் செருகும் சாதனம்; செருகு மருந்துக் குச்சி; புழை வில்லை : கருப்பையை நிலை பிறழாமல்