பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/836

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pessimism

835

pethilorfan


தாங்குவதற்காக அல்குல் வாயிலில் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருவை நிலைப்படுத்தும் குறிவாயினுள் கரையும் மருந்து. அல்குல் வாய்ப்புழை வழி மருந்து ஏற்ற பயன்படும் வில்லை.

pessimism : சோர்வு மனப்பான்மை; தோல்வி மனப்பான்மை; துன்பவுணர்வு : எதிலும் தீமையையே காணும் மனப்போக்கு உலகில் அனைத்துமே தீயவை என்று கருதும் மனப்பான்மை.

pest : தொற்றுநோய்.

pest-house : தொற்று நோய் மருத்துவமனை.

pesticides : பூச்சிக்கொல்லி : பூச்சிகளைக் கொல்லும் மருந்துகள்.

pestilence : மாமாரி : மரணத்தை ஏற்படுத்துகிற ஒருவகை கொள்ளை நோய்.

PET : பெட் : போசிட்ரான் எமிஷன்டோமோகிராஃபியின் தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். உயிருள்ள திசுக்களின் குறிப்பாக பெருமூளைப் புறனியில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் நோய் நிலை இயல்பு மாற்றங்களைக் கண்டு பிடிக்க,ரேடியோ நியூக்லைடுகளைப் பயன்படுத்தும், உள்நுழையா படமெடுக்கும் செயல்முறை.

patechia : குருதி சொட்டுக் கசிவு; சிறு குருதி ஒழுக்கு; நுண்கசிவு : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும்.

Peter's anomaly : பிட்டர் குரைபாடு : ஜெர்மன் மருத்துவர் ஆல்ப்ரெட்பிட்டர் பெயரால் அழைக்கப்படும் நோய்த் தொகுப்பு. கருவில் வளரும் கண்ணில் டெஸ்சிமெட் படலத்தில் இடைவெளி ஏற்படுவதால் பளிங்குப் படல நடுவில் குறையும் மற்ற கோளாறுகளும். இது முன்னறை நோயியம் எனவும் அழைக்கப்படுகிறது.

pethidine : பெத்திடின் : மூளையில் உணர்வின்மை உண்டாக்கி நோவகற்றும் ஒரு செயற்கை மருந்து. இது அறுவை மருத்துவத்துக்கு முன்பும் பின்பும் மார்ஃபினுக்குப் பதிலாகக் கொடுக்கப்படுகிறது. இதனை வாய்வழியாகவும் நரம்பு ஊசி மூலமும் செலுத்தலாம். இது இரத்தழுத்தத்தைக் குறைக்கு மாகையால், இதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

pethilorian : பெத்திலோர்ஃபான் : பெத்திடினும், லெவல்லோர்ஃ