பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/839

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phakoemulsification

838

pharmaceutical


துகள் ஒன்றைச் சுற்றியுள்ள குடி படலம் குழ் சவ்வுப்பை, பகுப்புநொதியும் நுண்குமிழியும் ஒட்டியிணைவதால் அது செரிக்கப்படும்போது அது ஃபேகோலை சோசோம் எனப்படும்.

phakoemulsification : பசைக்குழம்பாக்கம் : முதிர்ச்சியடைந்த கண்படிக ஆடி இழைகளைத் திரவமாக்குவதற்குப் புறஒலி அதிர்வு பயன்படுத்தப்படுகிறது. திரவமான ஆடிப் பொருள் பிறகு வெற்றிடத் துப்புரவுக் கருவி செய்வதுபோல் வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகிறது.

phalanges : விரல் எலும்புகள் : கை விரல்களின் அல்லது கால் விரல்களின் தனித்தனி எலும்புகள்.

phalanx : விரல் எலும்பு; விரலென்பு : 1. கை விரல் அல்லது கால் விரல்களுக்கான எலும்புகளில் ஒன்று. பெருவிரல் அல்லது கால்கட்டை விரலுக்கு இரண்டு. மற்ற விரல்களுக்கு இரண்டு எலும்புகள் உள்ளது. உள்ளங்கைக்கு அருகிலுள்ள அண்மைய, அடுத்து நடு, அடுத்து சேய்மைய என மேலிருந்து கீழாக பெயர் பெறுகின்றன. 2. உட்செவியிலுள்ள (கார்ட்டி) உறும்பின் வலைச் (சுருஸ்) சவ்வின், உள்வெளி விரலனுக்களாலான தட்டுத் தொகுதிகளில் ஒன்று.

phallus : ஆண்குறி.

phantasm : எழுப்பா மனக்காட்சி : உண்மைத் தூண்டல்களால் எழுப்பப்படாத மனக்காட்சி.

phantom limb : மருள்தோற்றவுறுப்பு : உடலிலுள்ள ஒர் உறுப்பு வெட்டியெடுக்கப் பட்ட பின்னரும் அந்த உறுப்பு உடலில் இணைந் திருப்பதாகத் தோன்றும் உணர்வு, வெட்டியெடுக்கப்பட்ட உறுப்பிலிருந்து வலி உண்டாவதாகவும் தோன்றும்.

phantom pregnancy : போலிக் கர்ப்பம்; போலிக் கருத்தோற்றம் : குழந்தையில்லாத ஒரு பெண்ணிடம் குழந்தை பெறவேண்டும் என்ற தீராத வேட்கையினால், கருவுறுதலின் தொடக்க நிலை அறிகுறிகள் தோன்றுதல்.

phantosmia : பொய்நுகர்வுணர்வு : எந்த வெளித்தூண்டல்களும் இல்லாத நிலையில் உணரப்படும் நுகர்வுணர்வு.

pharm : மருந்து : மருந்தாகக் கலை, மருந்துக்கடை, மருந்தாக்கத் தொழிலுக்குரிய, மருந்துப்பொருள் அடைவு நூல்.

pharmaceutical : மருந்தாக்கவியல்; மருந்தாக்கம் சார்ந்த; மருந்தாக்கிய : மருந்தாக்கம்,