பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/844

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phenylacetic acid

843

pheochromocytoma


இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. அரிதாக வாய் வழியாகவும் கொடுக்கப்படுகிறது.

phenylacetic acid : ஃபீனைல் அசெட்டிக் அமிலம் : ஃபீனைல் அலனின் சிதை மாற்றப் பொருள். இது சிறுநீரில் தோன்றுவது ஃபீனைல் கீட்டோனூரியா எனப்படும்.

phenylalanine : ஃபெனிலாலானைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

phenylbutazone : ஃபெனில்புட்டாசோன் : வீரியத்துடன் ஒரு நேரம் செயற்படக்கூடிய ஒரு அழற்சியகற்றும் மருந்து. இதனால் நச்சு விளைவுகள் அடிக்கடி ஏற்படும். இது இப்போது முதுகெலும்புக் கண்ணி அழற்சிக்கு மருத்துவ மனையில் மட்டுமே பயன்படுத் தப்படுகிறது.

phenylephrine : ஃபெனிலெஃபிரின் : குருதிநாள இறுக்க மருந்து அட்ரீனலின் போன்றது. ஆனால் அதைவிட உறுதியானது. இதனை தசை வழியாக ஊசி மூலம் செலுத்தலாம். இது பொதுவாகக் கண்சொட்டு மருந்தாகவும் (0.5-10%) முக்குத் தெளிப்பு மருந்தாகவும் (0.25%) பயன்படுத்தப்படுகிறது.

phenylketonuria (PUK) : ஃபெனில்கெட்டோனுரியா : ஃபெனி லாலானைனின் வளர்சிதை மாற்ற எச்சப் பொருள்கள். இது சிறுநீரில் ஃபெனில் செட்டோன்களாக உள்ளது. உணவில் உள்ள ஃபெனிலாலானை னினை டைரோசினாக மாற்றுகிற நுரையீரலிலுள்ள ஃபெனிலாலானைன் ஹைட்ராக்கிலேஸ் என்ற செரிமானப்பொருள் (என்சைம்) செயலிழப்பதன் காரணமாக இது உண்டாகிறது. இதனைப் பிறவியிலேயே கண்டுபிடித்து உரிய உணவு முறையைக் கொண்டாலன்றி, இதனால் மனக்கோளாறு ஏற்படும்.

phenytoin : ஃபெனிட்டாயின் : கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும் வலிப்பு நீக்க மருந்து, சில சமயம், ஃபெனோபார்பிட்டோனும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

pheochromoblast : பழுப்பு மஞ்சள் கருவணு : இது வளர்ச்சியடைந்து பழுப்பும் மஞ்சளணுவாகிது.

pheochromocytoma : ஃபியோகுரோமோசைட்டோமா : அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள்