பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/845

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pheromone

844

phlebolith


சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வையும், வேகத்துடிப்புமான முக்குறிகளும் இரத்தக்கொதிப்பு நோயாளியிடம் உண்டாகிறது.

pheromone : இன ஈர்ப்புச் சுரப்பு : ஒரு உயிர் வெளிப்படுத்தும், தன் இனத்தைச் சார்ந்த ஒரு உயிரினத்தில் ஒரு விளைவை உண்டாக்கும் திறன்படைத்த இயக்குநீர்.

Philadelphia chromosome : ஃபிலடெல்ஃபியா இனக்கீற்று : நாட்பட்ட மச்சை வெள்ளணுப் புற்று நோயாளிகளில் காணப்படும் குறையுள்ள இனக்கீற்று. இனக்கீற்று 22இன் சேய்மநீள் இழை, இனக்கீற்றின் நீள் இழைக்கு மாற்றப்பட்டிருப்பது.

philtrum : ஃபில்ட்ரம் : உதட்டின் வெளிப்பரப்பில் நடுக்கோட்டுக் குழிவு.

phimosis : மானி நுதி இறுக்கம்; உறை நீங்கா ஆண்குறி; முன் தோல் குறுக்கம்; நுனித்தோல் இறுக்கம் : மானி துதி (லிங்கக் கவசம்) இறுக்கமடைதல். இதனால் அது சுருங்கி ஆண்குறியை மூடிக்கொள்ள இய லாது போகிறது.

pHisoHex : ஃபைசோஹெக்ஸ் : நோய் நுண்மத்தடை மருந்தாகவும், பாக்டீரியாவுக்கு எதிராகத் தோலைச் சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும் மருந்து. என்ட்சூஃபோன் என்ற சலவைப்பொருள் 3% ஹெக்சாகு ளோரோஃபேன், லானோலின், கொலஸ்டெரோல்ஸ், பெட்ரோலாட்டம் ஆகியவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

phlebectomy : சிரை அறுவை; சிரை நீக்கம் : இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம்.

phlebitis : சிரை அழற்சி : இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம்.

phleboclysis : சிரை கழுவல் : குளுக்கோஸ், சலைன் போன்ற நீர்மங்கள் சிரை வழியாக ஊசி மூலம் செலுத்துதல்.

phlebography : சிரைவரைவு : 1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல்.

phlebolith : சிரைக்கட்டி; சிரைக் கடினமடைதல்; சிரைக்கல் : இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயில் ஏற்படும் கட்டி.