பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/849

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phosphoryiase

848

photocoagulation


phosphorylase : ஃபாஸ்ஃபோரிலேஸ் : 1. ஒரு கரியமற்ற ஃபாஸ் ஃபேட் தொகுதியை வேறொரு கரிய ஏற்பிக்கு மாற்றுவதில் ஈடுபடும் நொதியாகும். இந்த டிரேன்ஸ்ஃபெரேஸ், 2. ஃபாஸ்ஃபரை சிதைக்கும் வினையூக்கியாக செயல்படும் நொதிகளில் ஒரு தொகுதி.

phosphorylation : ஃபாஸ்பேட் இணையாக்கம் : 1. ஒரு கரிய கூட்டும் பொருளுடன் ஃபாஸ்பேட்டை இணைத்தல், 2 ஏடி பியை ஏ(ட்)டி(ப்)பியாக ஃபாஸ்ஃபேட்டை இணைத்து மிகு திறன் ஃபாஸ்ஃபேட்பிணைப்புகளை உருவாக்குதல்.

photalgia : ஒளி நோவு; ஒளிவழிக் கண் வலி; ஒளிவலி : அதிக ஒளிபட்டால் கண்களில் உண்டாகும் வலி.

photoactivators : ஒளிச் செயலூக்கிகள் : வாய்வழி உட்கொள்ளும் பொருட்களால் ஒளியின் அழிப்பாற்றல் அதிகரித்தல்.

photoactive : ஒளிச் செயலூக்கும் : அல்ட்ராவயலெட் கதிர்வீச்சு அல்லது சூரிய ஒளிக்கு வேதி வினைப்பாடு.

photoallergen : ஒளி ஒவ்வாமை ஊக்கி : ஒளிக்கு ஒரு ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தும் ஒரு இடைப்பொருள்.

photoallergy : ஒளி ஒவ்வாமை : ஒளி மற்றும் சிலவேதிப் பொருள்களுக்கு முன்பே கூருணர்வுக்கு ஆட்பட்ட நிலையில் அவற்றிற்கிடையே ஏற்படும் இடைவினையால் தாமதமாக ஏற்படும் தடுப்பாற்றல் வகைப்பட்ட ஒளி (ஒவ்வாமை)க் கூருணர்வு.

photochemical : ஒளி வேதியியல் பொருள் : ஒளிபட்டு வேதியியல் வினைபுரியக்கூடிய வேதியியல் பொருள்.

photochemotherapy : ஒளி வேதியியல் மருத்துவம் : நோயாளியைப் புறவூதா ஒளிக்கு உட் படுத்தி மருந்தின் விளைவினை அதிகரித்தல்.

photochromogen : ஒளிநிறச்சன்னி : மைக்கோ பேக்டீரியம் கான்சாசியை போன்ற நுண்ணுயிர் ஒன்று வெளிச்சமிருக் குமிடத்தில் வளரும்போது உருவாகும் நிறமி.

photocoagulation : ஒளித்திரட்சி : மிகுதியாக குவிக்கப்படும் ஒளியின் வெப்பவிளைவால் திசு அழிதல்.

photocoagulation : ஒளிவழி உறைதல் : ஆற்றல் வாய்ந்த ஒளியை ஒருமுகமாகப் பாய்ச்சித் திசுக்களை எரித்தல்.