பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/855

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pigments bile

854

pinch


அளவுக்குமீறி அடுக்கடுக்காகப் படிதல்.

pigments bile : பித்தநீர் நிறமிகள்.

pill : மாத்திரை; குளிகை : விழுங்கக்கூடிய வகையில் அமைந்த திடமருந்து மாத்திரை.

piler : மூலநோய்.

pil-roiling : விரலுருட்டல் : பார்க்கின்சன் நோயில் பெருவிரல் மற்றும் கட்டுவிரல் நுனியும் சேர்ந்து உருளும் அசைவு.

pillule : சிறுகுளிகை : சிறிய மாத்திரை.

pillocarpine : பைலோகார்ப்பைன் : கண்நீர் அழுத்த நோயில் கண் மணிச் சுருக்க மருந்தாகப் பயன்படும் கோலினெர்ஜிக் ஆல்கலாயிடு (காரகம்) பைலோகார்ப்பஸ் இலையிலிருந்து பெறப்படுகிறது.

pilomotor nerves : சிலிர்ப்பு நரம்புகள் : மயிர் மூட்டுப்பையுடன் இணைந்த நுண்ணிய நரம்புகள், இவை மயிரை விறைப்பாக நிற்கச் செய்து தோல் சிலிர்ப்புத் தோற்றத்தை உண்டாக்குகிறது.

pimafucin : பிமாஃபூசின் : நாட்டாமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

pilonidal : முளையில் முடி : புறத்தோல் நீர்க்கட்டியில் அல்லது ஒரு தோலின் ஆழ அடுக்கில் மயிர் வளர்வதைக் குறிப்பது.

pilosebaceous : மயிர்ச்சீபு : சீபச்சுரப்பிகள் மற்றும் மயிர் வேர்க்கால்கள் பற்றியது.

pilus : பைலஸ் : 1. ஒரு மயிர். 2. சில நுண்ணுயிர்களில் நுண்னிய இழை போன்ற துணையுறுப்புகளில் ஒன்று.

pimelitis : முகவழற்சி : 1. கொழுப் புத்திசுவழற்சி. 2. விழிவெண் படலத்திசுவழற்சி.

pimple : முகப்பரு; குரு; பரு : முகத்தில் உண்டாகும் பரு.

pin and plate : ஊசியும் தட்டும் : தொடையெலும்புக் கழுத்து முறிவை சரிசெய்ய, கழுத்தில் ஊசியையும், தண்டில் தட்டுப் பகுதியையும் திருகிக்பொருத்தும் உள்நிலைப்படுத்தும் கருவி.

pincer nail : குறட்டு நகம் : நகப்படுகை குறுக்கு வளைவு அதிகமானதால், மிகுந்த வலியோடு, விரல்நுனி மென்திக இழப்பும் நேர்கிறது.

pinch : நெரிப்பு : 1. பெருவிரல், சுட்டு விரல்களுக்கிடையே, பற்கள் மற்றும் கருவியின் அலகுகள் இவற்றிடையே பொருள்களைப் பற்றும் முறை. 2. அழுத்துதல், கருக்குதல் அல்லது கசக்குதல்.