பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

placentation

858

plague-spot


யேற்றுகிறது. இயல்பான மகப்பேற்றின்போது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் இது வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறாத நச்சுக்கொடி, 'ஒட்டு நச்சுக்கொடி' எனப்படும். இது பொதுவாக, கருப்பையின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதனால் நச்சுக்கொடி முறிவு (அற்று விழுதல்) ஏற்படும்.

placentation : நச்சுக்கொடியமைவு; நச்சுக் கொடியிடல் : நச்சுக்கொடி உருவாகி இணைத்துக்கொள்ளும் நிகழ்முறை.

placebo : மருந்துப் போலி : 1. நோயாளியை திருப்திப் படுத்துவதற்காக எந்த மருந்து விளைவுமில்லாத, ஆனால் நோயாளி மருந்தென நம்பும் பொருளைக் கொடுத்தல். 2. உயிர்களில் செயல் விளை விக்கும் பொருளொன்றின் மருத்துவத்திறனறிய சோதனை செய்வதற்காக, எந்த மருந்து விளைவுமில்லாத பொருள் ஒன்றைப் பரிசோதனைக் கட்டுப்பாடாகக் கொடுத்தல்.

placental abruption : நச்சுக்கொடி முறிவு : மகப்பேற்று வலி எடுப்பதற்கு முன்பும், 28 வாரங்களுக்குப் பின்பும் யோனிக்குழாயில் இரத்தக்கசிவு ஏற்படுதல்.

placenta acreta : வேரூன்றிய நஞ்சு : ஒட்டி இறுகிய நஞ்சு.

placentapreavia : முன்னிருக்கும் நஞ்சு; நச்சுக்கொடி முந்துநிலை.

placental insufficiency : நச்சுக்கொடிக் குறைபாடு; நஞ்சு திறக்குறை : நச்சுக்காடி போதிய அளவில் இல்லாதிருத்தல். இது தாய்க்குள்ள நோய் அல்லது மாதங்கடந்து கருமுதிர்வடைதல் காரணமாக உண்டாகலாம். இதனால்,குழந்தை குறை மாதத்தில் பிறக்கக்கூடும்.

placentog raphy : நச்சுக்கொடி ஊடுகதிர்ச் சோதனை : ஒளி ஊடுருவாத பொருளை ஊசி மூலம் செலுத்தி நச்சுக்கொடியை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் பரிசோதனை செய்தல்.

plagiocephaly : பிளேஜியோ கெஃபாலி; கோணமண்டை : ஒரு பக்கம் முன்பக்கப்புடைப்பும் மறுபக்கம் பின்புடைப்பும் கொண்ட கோணல் மண்டை

plague : கொள்ளை நோய்; பிளேகு : நோயுற்ற எலிகள் மூலம் விரைவாகப் பரவும் மிகக் கொடிய கொள்ளை நோய். எலிகளிடமிருந்து தெள்ளுப் பூச்சி (உண்ணிகள்) மூலம். இது மனிதனுக்குப் பரவுகிறது.

plague-spot : பிளேகு மையம் : பிளேகு என்னும் கொள்ளை நோயினால் வீக்கம் உண்டாகும் இடம்.