பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/860

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

planchet

859

plasma


planchet : பிளான்ச்செட் : கதிரியக்கப் பொருளைவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறு தட்டைக் கொள்கலம்.

planimeter : தளஅளவி : ஒரு தள உருவப்பரப்பை அளக்க அதனைச் சுற்றிலும் ஒரு டிரேசரை செலுத்தும் பொறியமைப்பு (தடங்காண்பி).

planing : தளமமைப்பு : 1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை.

planned parenthood : திட்டமிட்ட குழந்தைப்பேறு : தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையையும் குழந்தைப் பேற்றிடை வெளியையும் ஒழுங்குபடுத்த பெற்றோர் கைக்கொள்ளும் முறைகள்.

planoconcave : தளக்குழிய : ஒரு பக்கம் மட்டத்தளமாகவும் மறுபக்கம் குழிவாயுமுள்ள ஒரு ஒளிவில்லை பற்றியது.

planoconvex : தளக்குவிவு : ஒரு பக்கம் தட்டையாகவும் ஒரு புறம் மேற்குவிவும் ஆன கண்ணாடிவில்லை பற்றியது.

planorbis : சிலவகை இரத்த ஒட்டுண்ணிப்புழு இனங்களுக்குகிடை ஒம்புநர்களாகச் செயல்படும் புதுநீர் நத்தைகளில் ஒருவகை.

plant : தாவரம் : கார்பன்டை ஆக்ஸைடும் தண்ணிரும் சேரும் போது கார்போஹைட்ரேட் களையும் ஆக்ஸிஜனையும் உருவாக்கும் குளோரோஃபில் கொண்ட ஒரு உயிர்ப்பொருள்.

plantar : உள்ளங்கால் சார்ந்த; அங்கால்; பாத : உள்ளங்காலுக் குரிய.

plantation : இடத்தில் பொருத்தல் : எலும்பு(ப்பற்) குழிக்குள் ஒரு பல்லைச் செருகுதல் அல்லது பொருத்துதல்.

plantigrade : தாள்; காலடி.

plaquenil : பிளாகுவினில் : ஹைட்ராக்சிகுளோரோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

plasmodia : ஒட்டுயிர் நுண்மம் : மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.

plasm : உயிரியற் பொருள் : உயிர்மத்தின் ஊன்மம்.

plasma : குருதிநீர் ஊனீர் நிணநீர் : குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப்பகுதி. கருமையான தீப்புண்களில் நோயாளிக்குக் குருதிச் செறிவு ஏற்படும்போது இரத்தம் செலுத்தப் பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞ்சள் நிறத்தூளாக