பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/861

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plasmablast

860

plasmid


இருக்கும். இதனைத் திரவமாக்கி உட்செலுத்தலாம். டெக்ஸ்டிரான் பிளாஸ்மோவின் போன்ற பல்வேறு குருதிநீர் மாற்றுகள் உள்ளன.

plasmablast : ஒருவகை பிரியாத உயிரணு முதிர்ச்சியடைந்து குருதி நீரணுவாக மாறுதல்.

plasmacyte : ஊநீரணு (குருதி) நீரணு : எலும்பு மச்சையிலும் இணைப்புத்திசுவிலும் காணப்படும் எதிர்மியங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த குருதி நீரணு.

plasmacytoma : ஊநீரணுப்புற்று : குருதி நீரணுக்களாலான ஒரு புற்றுக்கட்டி.

plasmacytosis : குருதிநீரணுப் பெருக்கம் : குருதியில் குருதி நீரணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருத்தல்.

plasmagel : கனிய இழுமம் : ஒரு அமீபாவிலுள்ள கூழ்மம் போன்ற உட்பொருளுடைய அகக்குழ்மத்தின் வெளிப்புறப் பகுதி.

plasmapheresis : குருதிநீர்ச்சீர்மம் (பிளாஸ்மானயனம்) : இரத்தம் உடலிலிருந்து எடுக்கப்பட்டு அதன் பகுதி பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு நச்சுப் பொருட்கள் வளர்சிதையப் பொருட்களும் எதிர்மியங்களும் நீக்கப்பட்ட பிறகு மீதம் உள்ள பகுதி உடலுக்குள் திரும்பச் செலுத்தப்படும் செய்முறை.

plasma proteins : குருதிநீர்ப் புரதங்கள்.

plasmatherapy : குருதிநீர் மருத்துவம் : குருதியிழப்பால் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் குருதி ஊநீர் பயன்படுத்தி மருத்துவம் அளித்தல்.

plasmatogamy : கணிகக் கலப்பு : உட்கருக்கள் இணையாமல் இரண்டு அல்லது மூன்று உயிரணுக்களின் அணுக்கூழ்மங்கள் ஒன்றியிணைதல்.

plasma volume extender : குருதிநீர் பெருக்க நீர்மங்கள் : உடல் நலத்தாக்கத்துக்கான ஊசியின் மூலம் செலுத்தப்படும் டெக்ஸ்ட்ரான் போன்ற மூலக்கூறெடை மிகு கரைசல்கள்.

plasmic (plasmatic) : ஊனீர் சார்ந்த : ஊன்மம் சார்ந்த.

plasmid : பிளாஸ்மிடு : தாளாத இரட்டிக்கும் அணுக்கூழ்மத்திலுள்ள பண்புக்கீற்றில்லாத வட்ட டி.என்.ஏ. மூலக்கூறு. குளோனிங்கில் நுண்ணுயிர் ஏந்திகளாக அது பயன்படுத்தப்படுகிறது. நோயுயிரெதிர்ப் பொருள் எதிர்ப்புக் காரணிகளின் குறியீடாக நுண்ணுயிர்களில் அவை காணப்படுகின்றன.