பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/869

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pneumoganeric

868

pneumonia


போட்டுகாற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி நீரனைகளையும், சிலந்தியுரு உறையடி வெளியையும் எக்ஸ்ரே படம் எடுத்தல்.

pneumoganeric : நுரையீரல் இரைப்பை சார்ந்த : நுரையீரல், இரைப்பை ஆகியவை தொடர்புடைய.

pneumogastric nerves : நுரையீரல்-இரைப்பை நரம்புகள் : மூளை நரம்புகளில் பத்தாவது இணை.

pneumogastrography : வளிய இரைப்பை வரைபதிவு : இரைப்பைக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படமெடுத்தல்.

pneumogram : வளிய வரை படம் : 1.மூச்சியக்க அசைவுகளின் வரைபடப் பதிவு. 2. காற்று அல்லது வாயுவைச் செலுத்திய பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம்.

pneumography : வளிய, வரைபதிவு : 1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல்.

pneumohaemothorax : வளிய குருதிமார்பு : நுரையீரலுறைக் குழிவறையில் வாயு அல்லது காற்றும் குருதியும் இருத்தல்.

pneumohydrothorax : வளிய நீரமார்பு : மார்பு நீர வளிய வீக்கம். நுரையீரலுறைக் குழுவறையில் காற்று அல்லது வாயுவும் குருதியும் தேங்கியிருத்தல்

pneumomassage : வளியத்தேய்ப்புத் தடவுகை : உட்செவியின் சிற்றெலும்புகளின் இயக்கத்திற்கு உதவும் செவிப் பறையை காற்றுத் தடவல்.

pneumomycosis : நுரையீரல் பூஞ்சன நோய் : நுரையீரலைப் பீடிக்கும் பூஞ்சன நோய்.

pneumomyelography : வளிய மச்சை வரைபதிவு : முதுகில் ஊசிபோட்டு தண்டுவடக்கால் வாய்க்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு.

pneumonectomy : நுரையீரல் அறுவை; நுரையீரல் நீக்கம்; நுரையீரல் வெட்டு; திறப்பு : துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கிய நிலை. இந்நோய் இரண்டு நுரையீரல்களையும் பாதித்தால் அது 'இரட்டை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும். ஒரு நுரையீரலைப் பாதித்தால் அது