பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/870

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pneumonitis

869

pneumothorax


'ஒற்றை நுரையீரல் காய்ச்சல்' எனப்படும்.

pneumonitis : நுரையீரல் திசு அழற்சி; மூச்சுப்பையழற்சி : நுரையீரல் திசுக்களில் ஏற்படும் வீக்கம்.

pneumonolysis : நுரையீரல் பிரிப்பு : மார்புக் குழிவறைச் சுவர்களுடன் நுரையீரலை இணைத்திருக்கும் திசுக்களை வெட்டிவிடுதல்.

pneumonoperitonitis : வளிய வயிற்றுள்ளுறையழற்சி : வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் வாயுவுடன் வயிற்றுள்ளுறையழற்சி.

pneumoperitoneography : வளியவயிற்றுள்ளுறை வரை பதிவு : வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்றைச் செலுத்தி பின் வயிற்று உறுப்புக்களையும் வயிற்றுள்ளுறையையும் எக்ஸ்ரே படமெடுத்து பரிசோதனை.

pneumoperitoneum : வளிய வயிற்றுள்ளுறை : அகநோக்கிப் பரிசோதனையின்போது, வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு இருத்தல்.

pneumoperitonitis : வளிய வயிற்றுள்ளுறையழற்சி : வயிற் றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு தேங்கிய வயிற்றுள்ளுறையழற்சி.

pneumopleuroparietopexy : நுரையீரலும் உறையும் சுவர்நிலை நிறுத்தம் : நுரையீரலையும் அதன் உறையையும் மார்புக் காயத்தின் ஒரத்தில் அறுவை மூலம் ஒட்டி வைத்தல்.

pneumopyelography : வளிய நீரகவட்டில் வரை பதிவு : சிறுநீரக வட்டிலுக்குள் காற்று அல்லது ஆக்சிஜன் செலுத்தி சிறுநீரக வட்டிலையும் சிறு நீர்க்குழலையும் கொண்ட எக்ஸ்ரே படம்.

pneumopyoperitoneum : சீழ் வளிய வயிற்றுள்ளுறை : வயிற் றுள்ளுறைக் குழியறைக்குள் வாயு அல்லது காற்றுடன் சீழ் தேங்குதல்.

pneumoradiography : வளிய எக்ஸ்ரே படப்பதிவு : காற்று அல்லது ஆக்சிஜனை செலுத்திய பிறகு ஒரு பகுதி எக்ஸ்ரே படப்பதிவு.

pneumotherapy : நுரையீரல் மருத்துவம் : 1. நுரையீரல் நோய்களுக்கு மருத்துவம். 2. அடர்த்தி குறைந்த உறைவித்த வாயுக்களால் உண்டாகும் நோய்களுக்கான மருத்துவம்.

pneumothorax : நுரையீரல் உறைகாற்று நோய்; உறைவளி நோய் : நுரையீரல் திசுக்களை அழுத்தும் வகையில் நுரையீரல் உறையில் காற்று அல்லது