பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/873

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poldine methylsulphate

872

polyadenomatosis


poldine methylsulphate : போல்டின் மெத்தில்சல்ஃபேட் : உணவு உண்டவுடன் இரைப்பையில் அமிலம் சுரப்பதைக் கட்டுப் படுத்தும் மருந்து.

polio : இளம்பிள்ளை வாதம் : குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு புகுகின்றன என்பது தெரியவில்லை. இந்நோய் பெரியவர்களையும் பாதிக்கிறது.

polioencephalitis : மூளைவாத அழற்சி : பெரு மூளையில் ஏற்படும் வாத வீக்கம்.

potiomyelitis : இளம்பிள்ளை வாதம் : முதுகந்தண்டின் சாம்பல் நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி மூளைத் தண்டிலும், முதுகுந்தண்டிலும் உள்ள முன் பக்கக் கொம்புகளின் இயக்க நரம்பணுக்களை ஒரு கொள்ளை நோய்க் கிருமி தாக்குவதால் இது உண்டாகிறது. இளம் பிள்ளைக்கு ஐந்து வயதிற்குள் உரியவாறு சொட்டு மருந்து கொடுத்தால் இந்நோயிலிருந்து காப்பாற்றலாம்.

polio viruses : இளம்பிள்ளை வாதக் கிருமி : இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் நோய்க்கிருமிகள், வைரஸ் நுண்ணுயிரி.

politzer's bag : போலிட்சர் பை : முன் தொண்டையிலிருந்து நடுக் காதுக் குழிவரையில் செல்லும் குழாயை உப்பச் செய்வதற்கான ஒரு ரப்பர் பை.

polen : மகரந்தத்தூள் : பூச்சிகள் அல்லது காற்றால் பரவும் விதை செடிகளின் நுண் துகள்கள் காற்றில் பரவும் பல பூந்தாதுக்கள் ஒவ்வாமைக் காரணிகளாக செயல்படுகின்றன.

pollicization : சுட்டு விரல் குறுக்க அறுவை; கட்டை விரல் மாற்றம் : சுட்டு விரலைச் சுழற்றி, பெரு விரலின் நிலைக்குக் கொண்டு வருவதற்காகச் குறுக்குவதற்குச் செய்யப்படும் ஒருவகை அறுவை மருத்துவம்.

polution : மாசுபடுத்தல் : அழுக்கான அல்லது நச்சுப் பொருட்கள் கொண்டு, அசுத்தமாக்கும் அல்லது தூய்மைகெடும் நிலை.

polya operation : இரைப்பை அறுவை : இரைப்பையின் ஒரு பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் போல்யா விளக்கியது.

polyadenitis : பல சுரப்பழற்சி : பல நிணக்கணுக்கள், குறிப்பாக கழுத்து நிணக்கணுக்களின் அழற்சி.

polyadenomatosis : பல சுரப்புக் கட்டி : பல சுரப்பு குறிப்பாக நாளமில்லா சுரப்புக் கட்டிகள்.