பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/875

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polycrotism

874

polyglycolic acid


polycrotism : பல் சிறு துடிப்பு : ஒவ்வொரு நாடிப் பதிவின் இறங்கு கோட்டில் பல இரண்டாம் நிலை அலைகள் காணப்படும் வாய்ப்பு நிலை போக்கி.

polycystic : பல நீர்க்கட்டி : பல நீர்க்கட்டிகளையுடைய, சிறு நீரக நோய். இது பெரும்பாலும் நுரையீரல் கட்டிகளுடன் தொடர்புடையது.

polycythaemia : சிவப்பணு பெருக்கம்; சிவப்பணு மிகைப்பு; சிவப்பணு மிகை நோய் : இரத்தத்தில் கற்றோட்டமாகச் செல்லும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுதல். இது நீர்ம இழப்பு காரணமாக ஏற்படலாம். ஒரு பிறவி இதய நோயில் ஏற்படுவது போன்று, ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் திறனை அதிகரிப்பதற்காகவும் உண்டாகலாம்.

polydactyly : மிகைவிரல்; விரல் மிகைப்பு : கை-கால்களில் இயல்பான எண்ணிக்கைக்குக் கூடுதலாக விரல்கள் இருத்தல்.

poly dipsia : பெருந்தாகம்; நீர் வேட்கை; வெகு தாகம் : அளவுக்குமீறித் தாகம் எடுத்தல்.

polydystrophy : பல் இணைப்புத் திசுக்குறை : இணைப்புத் திசுவில் பல்வேறு பிறவிக் கோளாறுகள் காணப்படும் நிலை.

polyene : பாலியீன் : ஆம்ஃபோ டெரிசின்பி மற்றும் நிஸ்டேட்டின் போன்ற பூஞ்சைக் காளான் எதிர்ப்பு மருந்துகள் போன்ற பல இரட்டைப் பட்டைகளைக் கொண்ட ஒரு வேதிப்பொருள்.

polyesthesia : பல் முனை உணர்வு : ஒரு முனைத்தூண்டல், பல முனைகளில் தொடுவது போன்ற உணர்வை ஏற் படுத்தும்படியான உணர்வுக் கோளாறு.

polygene : பல்மரபணு : ஒரு குணப்பாங்கில் பல மாறுதல்களை உண்டாக்க, ஒன்றாகச் செயல்படும் மரபணுத் தொகுதிகளில் ஒன்று.

polygenic : பல்மரபணுசார் : பலமுனைகளில் பல மரபணுக்களின் இடையீட்டுச் செயல்களால் விளையும் ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் மரபணுக்களின் இடையீடுகளால், ஒரு குணநிலை கட்டுப்படுத்தப்படுதல்.

polyglandular : பல்சுரப்புசார் : பல சுரப்பிகளை பாதிக்கும் அல்லது தொடர்புடைய.

polyglycolic acid : பாலிகிளைக்காலிக் அமிலம் : அறுவை மருத்துவத்தில் பயன்படும் பொருளைத் தயாரிக்கப் பயன்படும் கிளைகோலிக் அமில அன்ஹைட்ரைடின்மீச்சேர்மம்.