பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poroma

880

portal hypertension


poroma : போரோமா : 1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி.

porosis : போரோசிஸ் : 1. எலும்பு முறிவு சீர் வளரும் போது உண்டாகும் காய்ப்புக் கட்டி 2. குழிவறையமைப்பு.

porphin : பார்ஃபின் : ஃபைரின்களின் அடிப்படையாக உள்ள டெட்ராபைரோல் உயிர்க்கரு.

porphobilinogen : பார்ஃபோபிலினோஜன் : ஹீம் இணைப்பாக்கத்தில் இடையில் உருவாகும் பொருள். தீவிர பார்ஃபைரின் சிறுநீரிய நிலையில் மிகுந்த அளவில் சிறுநீரில் காணப்படுகிறது.

porphyria : போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை : போர்ப் பைரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொதுவாக மரபுவழி உண்டாகும். இது நரம்பு மற்றும் தசைச்திசுக்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில நோய்களில், மலம் அல்லது சிறுநீர் அல்லது இரண்டடிலும் போர்ப்பைரின் இருக்கும்.

porphyrins : போர்ப்பைரின் : குருதிவண்ணப் பொருள் போன்ற மூச்சுக்குழாய் நிறமிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள ஒளியுணர்வுக் கரிமக் கூட்டுப் பொருள். யூரோபோர்ப்பைரின், காப்ரோ போர்ப்பைரின் ஆகியவை இயற்கையாகக் கிடைக்கும் போர்ப்பைரின்கள்.

porphyrinuria : சிறுநீர் போர்ப்பைரின் : சிறுநீரில் அளவுக்கு அதிகமாக போர்ப்பைரின் இருத்தல். இது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் உள்ளார்ந்த பிழையினால் உண்டாகிறது.

Porro's operation : போர்ரோ அறுவை : சிசேரியன் அறுவைக் குப்பின், கருப்பை, கருப்பைக் குழல்கள் மற்றும் முட்டைப் பைகளை நீக்கும் அறுவை மருத்துவத்துக்கு இத்தாலிய மகப்பேறு மருத்துவர் எடு வார்டோ போர்ரோவின் பெயரிடப்பட்டுள்ளது.

porta : கல்லீரல் பிளவு : கல்லீர்லின் குறுக்கேயுள்ள பிளவு.

portal (vein) : கல்லீரல் சிரை : கல்லீரலுக்குக் குருதி கொண்டு செல்லும் குருதி நாளம்.

portahepatitis : கல்லீரல் சிரையழற்சி; ஈரல் வாயில் அழற்சி : கல்லீரல் சிரையில் ஏற்படும் வீக்கம்.

portal hypertension : கல்லீரல் சிரை மிகை யழுத்தம் : ஈரல்