பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/888

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PPS

887

precipitinogen


PPS : இடுப்புக்குழி வலி நோய்.

PR : மலக்குடல் வழி : மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி.

practise (medical) : மருத்துவத் தொழில் : ஒருங்கிணைந்த நலவாழ்வுக்கான கவனிப்பை வழங்கும் மருத்துவத் தொழில் செய்தல்.

practitioner (medical) : மருத்துவத் தொழில் செய்பவர் : மருத்துவம் அல்லது அது சார்ந்த நலப்பணித் தொழில் செய்பவர்.

practolol : புரேக்டோலால் : இதயக்கீழறைத் துடிப்புக் கோளாறுகளின் மருத்துவத்துக்கு தரப்படும் மருந்து.

pragmatism : பயனீட்டுவாதம் : நடைமுறைக்கேற்பச் செயல்படு வதை வலியுறுத்தும் அணுகுமுறை.

pralidoxime : பிராலிடாக்ஸிம் : பூச்சிக்கொல்லி மருந்து நச்சூட் டலுக்கு சிகிச்சை தரப் பயன்படும் மருந்து. கோலினெஸ்டரேசை மீள் செயலூக்குவது.

prazosin : பிராசோசின் : மட்டு மீறிய இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும் மருந்து. இது நேரடியான குருதிநாள விரிவகற்சி மூலமாக வெளி நரம்புகளில் வினைபுரிகிறது.

precancerous : புற்றுநோய்க்கு முந்தி; புற்றுமுன் : புற்றுநோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர்.

precapillary : தந்துகிமுன்நிலை : ஒரு சிறு தமனி அல்லது சிறு சிரையின் கிளைகள் (தந்துகிகளாகப் பிரிவதற்கு முந்திய நிலை).

precipitate : மண்டிப்படிவு : 1. ஒரு கரைசலிலுள்ள பொருள், திடப்பொருளாக அடியில் படியச் செய்தல். 2. படிவுப் பொருள். 3. மிக வேகமான நிகழ்வு, திடீர் மகப்பேறு போல.

precipitated labour : திடீர்ப் பேறுகாலம் : அவசரப் பேறு காலம்.

preciptin : பிரசிப்டின் : ஒரு காப்பு மூலத்துடன் சேர்ந்து ஒரு நோய்த் தடைக்காப்புத் தொகுதியை உண்டாக்கக்கூடிய ஒரு நோய் எதிர்ப்பொருள். இது பல நோய்களைக் கண்டறிய அடிப்படையாக அமைகிறது.

precipitinogen : பிரசிப்பிட்டினோஜென் : ஒரு பிராணியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் 3 குறிப்பிட்ட பிரெசிடின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விளைவியம்.