பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/895

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

primer

894

probenecid


primer : பிரைமெர் : நிரப்பு ஒரிமை டிஎன்ஏ வரிசையோடு இணையான சிறு குறை நியூக்கி யோடைடுப் பகுதி.

primidone : பிரைமிடோன் : வலிப்புக்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்து பொதுவாகக் கடுங் காக்காய் வலிப்புக்குக் கொடுக்கப்படுகிறது. எனினும் சிலசமயம் இலோசன காக்காய் வலிப்புக்கும் பயன்படுத்தப் படுகிறது.

primigravida : தலைச்சூலி; தலைக் கர்ப்பிணி; தலைப் பிள்ளைத் தாய்மை; தலைச்சான் கருவுற்ற தாய் : முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் பெண்மணி.

primipara : தலைக் கர்ப்பிணி; தலைப் பிள்ளைத்தாய்ச்சி; தலைச்சான் தாய்; முதற் பேற்றி : முதன் முதல் குழந்தை பெற்ற பெண்மணி.

prio : பிரையோன் : டிஎன்ஏ அல்லது ஆர்.என்.ஏ துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலுள்ள நியூக்ளிக் அமிலம் அல்லாத புரதம் மெது நச்சுயிர்களின் தொற்றுண்டாக்கும் பொருள்.

prism : பட்டகை : பக்கங்கள் இணைவகங்களாகவும் முனைகள் ஒத்தவையாக, சமமாக இணைத் தளங்களாகவும் உள்ள ஒளி ஊடுருவும் திடப்பொருள்.

privacy : தனிமை; அந்தரங்கத் தன்மை : 1 ரகசியம், 2. மருத்துவர் நோயாளி உறவில் அந்தரங்க நிலையை மதித்தல்.

private practice : தனியாக தொழில் செய்தல் : மாநில உரிம (லைசன்ஸ்) விதிமுறைகளின்படி, மருத்துவர் அல்லது பல் மருத்துவர் தனியாகத் தொழில் செய்தல்.

privileged sites : சிறப்பிடங்கள் : குருத்தெலும்பு, பளிங்குப் படலம் போன்ற திசு ஒட்டுமிடத்தில் காப்பு விளைவு நடைபெறா இடங்கள்.

proaccelerin : புரோ ஆக்சிலெரின் : குருதி உறை காரணி 5 செயலூட்டம் பெறும்போது அது புரோதிராம்பினை திராம்பினாக மாற்றுவதை விரைவு படுத்துகிறது.

probability : நிகழக்கூடியதன்மை : சோதனையை எத்தனை முறை திரும்பிச் செய்தாலும் ஒரே மாதிரியான நேர்நிலை முடிவுகள் வருகின்ற வாய்ப்பு நிலை.

probenecid : புரோபினெசிடு : பெனிசிலின், பாரா அமினோ சாலிசிலிக் அமிலம் போன்ற சில கூட்டுப் பொருள்களைச் சிறு நீரகம் சுரப்பைத் தடுக்கும் ஒரு மருந்து. கீல் வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுகிறது.