பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/905

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

protamine sulphate

904

protein


அடங்கிய கரு நிலைப்படுத்தும் குறிவாயுள் கரையும் மருந்துகளின் வணிகப் பெயர்.

protamine sulphate : புரோட்டாமின் சல்ஃபேட் : எளிய கட்ட மைப்புடைய ஒரு புரதம். ஹெப்பாரின் என்ற கல்லீரல் சுரப்பு நீருக்கு மாற்று மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் 1% கரைசலின் 1 மி.லி. அளவு 1000 அலகு ஹெப்பாரினின் விளைவுகளைச் செயலிழக்கச் செய்கிறது.

protamine zinc insulin : புரோட்டாமின் துத்தநாக இன்சுலின் : இன்சுலினின் கரையாத ஒரு வடிவம. புரோட்டாமின்(எளிய புரதம்), சிறிதளவு துத்த நாகம் ஆகியவை இணைத்து இது அமைகிறது. இது 24 மணி நேரம் வரை வேலை செய்யும்.

protease : புரத நொதிப்பு; புரோட்டீஸ் : புரதத்தைச் சீரணிக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது புரதத்தைச் சிதைக்கும் செரிமானப் பொருள்.

protective : பாதுகாக்கும் : ஒரு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி, ஆபத்து அல்லது காயத்திலிருந்து காப்பாற்றும்.

protective isolation : பாதுகாப்புத் தனிமையாக்கம் : தொற்று நோய்கள் எளிதில் பிடிக்கும் வாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் நோயாளி களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் புறத்தொடர்பில்லாமல் தனியாக ஒதுக்கி வைத்தல்.

protein calorie malnutrition (PCM) : புரதக் கலோரி ஊட்டக் குறைவு; புரத ஆற்றலூட்டக் கேடு : போதிய சீருணவு இல்லாமையால் உடலில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் குறைந்து ஏற்படும் ஊட்டச் சத்துக் குறைபாடு.

protein : புரதம் : நைட்ரஜனும் பிற இன்றியமையாத உயிர்ச் சத்துகளும் அடங்கிய ஊட்டச்சத்துப் பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத் திசுக்களில் உள்ளன. இவை அமினோ அமிலங்களினாலானவை. உடலின் வளர்ச்சிக்கும் பழுதடைந்த உறுப்புகளைச் சீர்படுத்துவதற்கும் இவை இன்றியமையாதவை. விலங்குப் புரதங்கள் மிகுந்த உயிரியல் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் இன்றியமையாத அமினோ அமிலங்கள் அடங்கி உள்ளன. தாவரப் புரதங்களில் சில அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. புரதங்கள் உடலில் நீரால் பகுக்கப்பட்டு அமினோ அமிலங்கள் உருவாகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புதிதாக உடல்