பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/911

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psoriatic arthritis

910

psychodinamics


psoriatic arthritis : சாம்பல் படை மூட்டு வீக்கம் : சாம்பல் படை நோயாளிகளுக்கு ஏற்படும் வாத மூட்டு வீக்கம். சாம்பல் படை நோயாளிகளில் 35% பேருக்கு இது உண்டாகிறது.

psoriderm : சோரிடெர்ம் : சாம்பல் படை நோய்க்குப் பயன் படக் கூடிய, லெத்திசினும், கரி எண்ணெயும் (கீல்) கலந்த நிறமற்ற பொருள்.

psychie : உளம்; மனம்; உயிர்; ஆன்மா.

psychiatrist : மனநோய் மருத்துவர்; உள நோய் மருத்துவர் : உளவியல் நோய் மருத்துவர்.

psychiatry : மனநோய் மருத்துவம்; உள நோயியல் : உளவியல் நோய்களைக் கண்டுபிடித்துக் குணப்படுத்தும் மருத்துவமுறை.

psychic : உள்ளம் சார்ந்த; உள்ளத்தின் : உடலியல்பு கடந்து உள்ளம் சார்ந்த.

psychics : உள ஆய்வியல்.

psychoactive : மனநிலை பாதிக்கும் (மருந்து) : மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது.

psychoanalysis : உளவியல் கழுப்பாய்வு; உளப் பகுப்பியல்; உள ஆய்வு : உளநிலை, உணர்வு ஆகியவற்றை ஆய்வு செய்து நோய்களைக் குணப் படுத்தும் உளவியல் மருத்தவமுறை.

psycho-analyst : உளவியல் மருத்துவ அறிஞர்; உளப் பகுப் பாய்வாளர் : உள ஆய்வாளர்.

psychochemotherapy : உளவியல் வேதி மருத்துவம்; வேதி உள மருத்துவம் : உணர்வு நிலையில் நோய்க் குறியியல் மாறுதல்களை மேம்படுத்துவதற்கு அல்லது குணப்டுத்துவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துதல்.

psychodyama : உளவியல் நாடக மருத்துவம்; உள நாடகம் : நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்து, அவர்களை உட்கிடக்கையை வெளிப்படுத்துமாறு செய்யலாம்.

psychodinamics : உள ஆற்றல் ஆய்வியல்; உள இயக்கவியல் : உளவியல் செய்முறைகள், குறிப்பாக உளவியல் நடவடிக்கையில் காரணகாரிய அம்சங்கள் பற்றி ஆராயும் அறிவியல்.