பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/913

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psychophysical

912

psychotic


psychophysical : மனம் உடல்சார் : உடல் தூண்டல் மற்றும் உணர்வு விளைவுக்கிடையே உள்ள உறவுநிலைகள் பற்றியது.

psychopathy : உளவியல் நோய்; உளப்பிணி; உளவியல் மருத்துவம் : மனத்தைப் பிடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மனமுதிர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் குன்றியிருக்கும்.

psychopharmacology : மனக் கோளாறு மருந்து மருத்துவம்; உள மருந்தியல் : மனக்கோளாறுகளுக்கு மருந்துகளைப் பயன் படுத்துதல்.

psychophysics : உடலுளத் தொடர்பியல்; உள இயற்பியல் : உடல் உணர்வுகளுக்கும் தூண்டுதல்களுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் உளவியலின் ஒரு பிரிவு.

psychoprophylactic : உளநோய் தடுப்பு; உள முற்காப்பு : உள நோய்களைத் தடுப்பதற்கான மருத்துவ முறை.

psychosis : பைத்தியம்; கோட்டி; கிறுக்கு; உளப்பிணி; உளவியம் : உணர்வுகளுக்கு எதிர்ச்செயல் புரிதல், நினைவுகர்தல், செய்தித் தொடர்பு கொள்ளுதல், பொருள் கொள்ளுதல், முறையாக நடந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கான திறமை குறைவாகவுள்ள ஆள்.

psychosomatic diseases : உளவியல் வழி நோய்கள்; உள வழி உடல் நோய்; உள உடலிய நோய்கள் : உளவியல் கோளாறு காரணமாக உண்டாகும் உடல் நோய்கள் மனக்கவலைகளினால் ஏற்படும் உடல் நோய்கள். தானியங்கும் நரம்பு மண்டலம் அளவுக்குமீறி இயங்குவதால் இது உண்டாகிறது. எடுத்துக் காட்டாக, குற்ற உணர்வு காரணமாக முகம் சிவக்கிறது.

psychosom imetics : மருட்சி மருந்துகள்; உளநோய் வினை : பைத்தியம் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் எல்எஸ்டி போன்ற மருட்சியூட்டும் போதை மருந்துகள்.

psychosurgery : மனநோய்க்கான அறுவை : மனநல வியாதிகளை சரிசெய்யய வடிவமைத்து நடத்தப்படும் அறுவை மருத்துவம்.

psychptherapeutics : வசிய மருத்துவம் : வசியத்துயில் போன்ற வழிகளினால் மனநோய்க்கு மருத்துவம் செய்தல்.

psychotherapy : அரிதுயில் மருத்துவம்; உளவழி மருத்துவம் : வசியத்தின் மூலம் உறக்கமுட்டி நோய்களுக்கு மருத்துவமளித்தல்.

psychotic : மனநிலை பாதிப்பு : 1. மனநலக் குறைவால் பாதிக்கப் பட்ட அல்லது தொடர்புடைய,