பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/914

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

psychotropic

913

public health


2. மனநலக்குறைவுக்கான குண நிலைகளை வெளிப்படுத்தும் ஒருவர்.

psychotropic : மூளையணு விளைவு; மனநிலை மாற்றி : மூளை அணுக்களின் மீது குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிற பொருள்.

pterygium : இமை முனை திசு வளர்ச்சி; தசைப் படர்த்தி; விழிப் படலம் : விழி வெண்படலத்தை மூடிக்கொள்ளும் வகையில் இமையிணைப் படலத்தில் ஏற்படும் சிறகு போன்ற தசைப்படலம்.

pterygoid : தாடை முளை எலும்பு : வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டை முளை எலும்புகளில் ஒன்று.

pterygoid process : வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல் தாடையிலுள்ள இரட்டை முளை எலும்புகளின் அமைப்பு.

ptosis : இமை தொய்வு; இமை வாதம்; இமை இறக்கம்; இமை இயங்காமை; இமைத் தொங்கல் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல்.

ptyalin : உமிழ்நொதி; உமிழ்நீர் : எச்சில் மாச்சத்து இலேசான அமிலத் தன்மையுடையது. இது மாச்சத்தை டெக்ஸ்டிரினாகவும், மால்ட்டோசாகவும் மாற்றுகிறது.

ptyalism : மிகை எச்சில்; எச்சில் பெருக்கு : எச்சில் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

ptyalolith : எச்சில் அடைப்பு; எச்சிற்கல் : எச்சில் கரப்பி நாளத்தில் உண்டாகும் கல்லடைப்பு.

pubertas praecox : முதிரா பாலியல் வளர்ச்சி; முன் அலர் பூப்பு : பருவம் வரும் முன்பு ஏற்படும் பாலியல் வளர்ச்சி.

puberty : பூப்புப் பருவம்; பெண்மையடைதல்; பூப்பு நிலை : இனப்பெருக்க உறுப்புகள் முதிர்ச்சியடையத் தொடங்கும் வயது.

pubes : பூப்பு மயிர்ப்பகுதி; அல்சூல் : பூப்பு எலும்பை மூடியிருக்கும் மயிருள்ள பகுதி.

pubiotomy : இடுப்பெலும்பு முறிவு : உயிருள்ள குழந்தையை வெளிக் கொணர்வதற்காக இடுப்பு முன் எலும்பை முறித்தல்.

pubis : இடுப்பு முன் எலும்பு; அல்குல் எலும்பு : இடுப்புக்குழி எலும்பும் கூட்டின் முன்புள்ள மைய எலும்பாக அமைந்து உள்ள முன் எலும்பு.

public health : பொதுசுகாதாரம் : சமுதாய முயற்சிகளை செயல் படுத்துவதன் மூலம், நோய் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, நலவாழ்வுக்கு வழிவகுக்கும் கலை மற்றும் அறிவியல்.