பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/918

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

purpura

917

pyelonepthritis


தொடர்புள்ள இதயத்தசை நார்கள், இதயக் கீழறை சுவர்களுக்குள் நீள்கின்றன.

purpura : ஊதாப்புள்ளி நோய்; இரத்தக் கசிவு : தோலின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் கொண்ட நோய். தந்துகிச் சுவர்களின் இணைப்பு பழுதடைவதால் அல்லது இரத்தத் தகட்டணுக்களின் தரம் அல்லது அளவு குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

purpuric acid : பர்ப்யூரிக் அமிலம் : ஊதாநிற உப்புகள் கொண்ட அமிலம்.

purulence (purulency) : சீழ்க்கட்டு : சீழ்கட்டிய நிலை.

purulent : சீழ்க்கட்டிய; சீழ்நிலை : சீழ்க்கண்ட சீழ் வடிகிற.

pus : சீழ் : சிலவகைக் கட்டிகளில் உண்டாகும் திரவம். இது பொதுவாக மஞ்சள் நிறமாக இருக்கும். இதில் திகத்திரவமும், பாக்டீரியாவும், இரத்த வெள்ளணுக்களும் அடங்கியிருக்கும்.

pus cells : சீழ் அணுக்கள்.

pustule : சீழ்க்கொப்புளம் : சீழ் கொண்ட மறுப்போன்ற தசை வீக்கம்.

putrefaction : அழுகல் / பதனழுவு; நொதித்தல் : உடல் உறுப்புகள் பாக்டீரியாவினால் சீழ்பிடித்து அழுகிப் போதல்.

putrescible : அழுகக்கூடிய : சீழ் பிடித்து அழுகுந் தன்மையுடைய.

putrid : அழுகிய பதனழிந்த.

purtid fever : குடற்காய்ச்சல்.

putrid sore throat : நச்சுத் தொண்டைக்கட்டு.

putridity : அழுகல்.

PVD : வெளிச்செல் குழாய் நோய்.

pyaemia : சீழ் நச்சுக் குருதி : மூளை, சிறுநீரகம், நுரையீரல்கள், இதயம் போன்ற உறுப்புகளில் இரத்தப் பாக்டீரியாக்கள் தோன்றிப் பெருகி வளரும் ஒரு கடுமையான குருதி நச்சூட்டு நோய்.

pyarthrosis : மூட்டுக்குழிச் சீழ்; மூட்டுச் சீழ்.

pyelitis : சிறுநீரகக்குழி அழற்சி; சிறு நீரக நுண்குழல் நோய் : கர்ப்ப காலத்தில் சிறுநீரகக் குழியில் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தினாலும் வரும்.

pyeloilithotomy : சிறுநீரக கல் அறுவை : சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

pyelonepthritis : சிறுநீரக சீழ் அழற்சி; சிறுநீரகம்-குழி அழற்சி : சிறுநீரகக் குழியிலிருந்து சிறுநீரகத்தின் மேலுறைவரைப்